எண்ணுாரில், புதிய அனல்மின் நிலையம் அமையவுள்ள இடத்தை சமன்படுத்துவதற்காக, லாரிகளில் ஏற்றி வரப்படும் மண் குவியல்களிலிருந்து டன் கணக்கில் இரும்பு துகள்களை அள்ளுவதற்காக, வியாபாரிகள் குவிகின்றனர்.
எண்ணுார் அனல் மின்நிலையத்தை ஒட்டி, புதிதாக அமைக்கப்படும் அனல்மின் நிலையத்தில் 600 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட உள்ளது. அதற்காக, இடம் தேர்வு செய்யப்பட்டு, நிலப்பகுதியை சமப்படுத்தும் பணி நடந்து வருகிறது.
அதற்கு வசதியாக, அனல் மின்நிலையத்தை ஒட்டி குவித்து வைக்கப்பட்டிருந்த இரும்பு துகள்கள் அடங்கிய மண் குவியல் லாரிகள் மூலம் அங்கு கொண்டு வரப்படுகிறது.
அனல் மின்நிலையம் அமைக்கும் இடம், மிகவும் பள்ளமாகவும், குளமாகவும் இருந்ததால், ஒரு ஆள் உயரத்திற்கு மேல், மண் நிரப்பப்படுகிறது.
அந்த மணல் குவியலில், இரும்பு பொருட்கள், துகள்கள், டன் கணக்கில் கிடப்பதாக தகவல் பரவியதால், அனல் மின்நிலையத்தின் சுற்றுப்பகுதியில் வசிக்கும் பகுதிவாசிகள் மற்றும் இரும்பு வியாபாரிகள், தினமும் முற்றுகைஇட்டு வருகின்றனர்.
இதனால், எர்ணாவூர் எர்ணீஸ்வரன் நகரிலிருந்து, சுவர் உடைக்கப்பட்டு, அந்த வழியாக, வியாபாரிகள் மட்டுமின்றி பகுதிவாசிகளும் இரும்பு துகள்களை அள்ளுவதற்கு வரிசை கட்டி வருகின்றனர்.
இதுபோன்ற காரணங்களால், எர்ணாவூர் எர்ணீஸ்வரன் நகர் மக்களுக்கும், இரும்பு துகள்களை அள்ளும் கும்பலுக்கும் வீண் தகராறு ஏற்படுகிறது. இதுகுறித்து அதிகாரிகளும், போலீசாரும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.