தினமும் 500 கிராம் காய், பழம் சாப்­பி­டுங்கள் சத்­து­ணவு வார விழாவில் டாக்டர் அறி­வுரை

:தினமும், 500 கிராம் புதிய காய்­க­றிகள், பழங்­களை, மூன்று வேளையும் சரி­வி­கித அள­வாக 
உட்­கொள்ள வேண்டும்’ என, சத்­து­ணவு வார விழாவில் மருத்துவர்கள் அறி­வு­றுத்­தினர்.
சென்னை, எழும்பூர் அரசு மகப்­பேறு மருத்­து­வ­ம­னையில், சத்­து­ணவு வார விழா நேற்று கொண்­டா­டப்­பட்­டது. இதில், 200க்கும் பெண்கள் பங்­கேற்­றனர். அவர்­க­ளுக்கு சத்­து­ணவின் அவ­சியம் குறித்து, மருத்துவர்கள் விளக்கம் அளித்­தனர்.
சென்னை மருத்­து­வ­மனை டீன் கன­க­சபை பேசி­ய­தா­வது:
தொற்­று நோய் வராமல் தடுக்க, சத்­து­ணவு முக்­கியம். 
கர்ப்ப காலத்தில் சத்­து­ணவு
அவ­சியம். ரத்த சோகையை தடுக்க தேவை­யான இரும்­
புச்­சத்து, முருங்கைக் கீரை,
முருங்­கைக்காய், எலு­மிச்சை, ஆரஞ்சு, பால் 
சாப்­பி­டு­வதால் கிடைக்கும்.
தினமும், 500 கிராம் காய்­கறி, பழங்­களை சாப்­பி­டு­வது நல்­லது. அதை மூன்று வேளையும், சரி­வி­கித அளவில் சாப்­பிட வேண்டும்.
இவ்­வாறு அவர் 
தெரி­வித்தார்.
‘அரிசி, சர்க்­கரை, உப்பு, எண்ணெய், தயிர் போன்­ற ­வற்றை அதிகம் சாப்­பிட
கூடாது. தினமும், உடற்­
ப­யிற்­சியும் முக்­கியம். தியானம், சரி­யான துாக்கம்
நோய்கள் வரத்தை தடுக்கும்’
எனவும், மருத்துவர்கள் வலி­யு­றுத்­தினர்

கண் தானம் அளிப்போர் எண்­ணிக்கை...அதி­க­ரிக்க வேண்டும்! நங்­க­நல்லுார், சவு­கார்­பேட்டை டாப்

சென்­னையின் மக்கள் தொகைக்கு ஏற்ப கண் தானம் இல்லை என்றும், விழிப்­பு­ணர்வு இல்­லா­ததே இதற்கு காரணம் என்றும், கண் மருத்­து­வர்கள் தெரி­விக்­கின்­றனர். அதே நேரத்தில், நங்­க­நல்லுார் மற்றும் சவு­கார்­பேட்டை பகு­தி­வா­சிகள் கண் தானத்­திற்கு அதி­க­ளவில் முன்­வ­ரு­வ­தாக தெரி­கி­றது.
கடந்த ஆகஸ்ட் 25ம் தேதி முதல் வரும் 8ம் தேதி வரை, தேசிய கண்­தான விழிப்­பு­ணர்வு இரு­வா­ரங்­க­ளாக அனு­ச­ரிக்கப் படு­கி­றது. கண் தானம் பற்­றிய விழிப்­பு­ணர்வை மக்கள் மத்­தியில் 
ஏற்­ப­டுத்­து­வதே இதன் நோக்கம்.
சென்­னையில் தினமும், சரா­ச­ரி­யாக 156 பேர் இறப்­ப­தாக, கடந்த ஜூலை மாத மாந­க­ராட்சி புள்­ளி­வி­வ­ரங்கள் தெரி­விக்­கின்­றன. அதா­வது, ஒவ்­வொரு மாதமும், ஏறத்­தாழ 4,680 பேர் இறக்­கின்­றனர். ஆனால், அதற்கு ஏற்ப கண் தானங்கள் கிடைப்­ப­தில்லை என,சங்­க­ர­நேத்­ரா­லயா கண் வங்கி ஆலோ­ச­கர்கள் விக்ரம் மற்றும் சுப்­பி­ர­ம­ணியம் தெரி­வித்­தனர்.

பேருக்கு உதவும்
இது­கு­றித்து, அவர்கள் கூறி­ய­தா­வது:
கண் தானத்தில், தேசிய அள­வி­லான கணக்­கெ­டுப்பின் படி, தமி­ழகம் முத­லி­டத்தில் உள்­ளது. தேசிய பார்­வை­யி­ழப்பு கட்­டுப்­பாட்டு திட்ட தகவல் படி, 2012 13ம் ஆண்டு மே மாதம், தமி­ழ­கத்தில் தான­மாக பெறப்­பட்ட கண்­களின் எண்­ணிக்கை 8,318. அதற்கு அடுத்த இடத்தில் உள்ள குஜ­ராத்தில் 8,066 கண்கள் தானம் பெறப்­பட்டு உள்­ளன. 7,153 கண்­களை தான­ம­ளித்து ஆந்­திரா மூன்­றா­மி­டத்தில் உள்­ளது.
அதே­நேரம், கண் தான விழிப்­பு­ணர்வில் சென்னை பின்­தங்கித் தான் உள்­ளது.
சென்­னையில் மாதத்­திற்கு 4,680 பேர் இறக்­கின்­றனர். ஆனால், 50க்கும் குறை­வா­ன­வர்­க­ளு­டைய கண்கள் மட்­டுமே தான­மாக கிடைக்­கின்­றன.
சவு­கார்­பேட்டை மற்றும் நங்­க­நல்லுார் பகு­தி­வா­சி­க­ளுக்கு கண்­தான விழிப்­பு­ணர்வு அதி­க­ளவில் உள்­ளது. அந்த பகு­தி­களில் இருந்து, ஒரு மாதத்­திற்கு ஓரி­ரு­வ­ரா­வது கண் தானம் அளிக்­கின்­றனர். அவர்­க­ளிலும், வட­மா­நி­லத்­த­வர்கள் மத்­தியில் கண்­தான விழிப்­பு­ணர்வு நிறை­யவே உள்­ளது.
இறந்­த­வரின் உற­வி­னர்­க­ளுடன் பேசி, கண் தானம் பெற முயற்­சிகள் மேற்­கொள்வோம். ஒரு­வரின் இறப்பு அவ­ரு­டைய குடும்­பத்­திற்கு பேரி­ழப்பு தான். ஆனால் அவ­ரது கண்கள் தான­மாக தரப்­படும் பட்­சத்தில், இருண்ட உலகில் தவிக்கும் நான்கு பேருக்கு ஒளி ஏற்­றிய பெருமை கிடைக்கும்.
இவ்­வாறு அவர்கள் கூறினர்.
கண் தானம் கொடுப்­பது எப்­படி?
ஒருவர் இறந்து ஆறு மணி நேரம் வரை கண்­களை தான­மாக கொடுக்­கலாம்.
தற்­கொலை தவிர்த்து விபத்து உள்­ளிட்ட மற்ற சாதா­ரண மர­ணங்கள் எங்கு நடந்­தாலும், அருகில் உள்ள அரசு மருத்­து­வ­ம­னை­களில் தகவல் அளிக்­கலாம் அல்­லது ‘1919’ என்ற தொலை­பேசி எண்­ணிலும் தகவல் அளிக்­கலாம்
தொழில்­நுட்ப முன்­னேற்­றங்­களால், தற்­போது, ஒருவர் கண்­தா­ன­ம­ளித்தால் நான்கு பேருக்கு பார்வை கிடைக்கும்
ரத்த அழுத்த நோய் மற்றும் சர்க்­கரை நோயால் பாதிக்­கப்­பட்­ட­வர்கள், கண்­புரை அறுவை சிகிச்சை செய்து கொண்­ட­வர்கள், கண்­ணாடி அணிந்­த­வர்­களும் கண் தானம் செய்­யலாம்
பிறந்த குழந்தை முதல் 100 வயது வரை­யி­லா­ன­வர்­களின் கண்­களும் பயன்­படும்
இறந்­தவர், ரத்தம் மற்றும் மூளை 
புற்­று­நோயால் பாதிக்­கப்­பட்­டி­ருந்­தாலோ, காசநோய், மலே­ரியா, மஞ்சள் காமாலை மற்றும் எச்.ஐ.வி.,யால் பாதிக்­கப்­பட்டு இறந்­தி­ருந்­தாலோ கண் தானம் அளிக்க முடி­யாது
தற்­கொலை செய்­பவர் எந்த நேரத்தில் இறந்தார் என்­பதை சரி­யாக கணிக்க முடி­யாது என்­பதால் அவ­ரு­டைய கண்­களை பயன்­
ப­டுத்த முடி­யாது

3,000 விநாயகர் சிலைகள்

கோவை செல்வபுரம் சேத்துமாவாய்க்கால் பகுதியில் 3,000 விநாயகர் சிலைகளை, ஓடைக்கல்மாவு, கிழங்குமாவு, காகிதக்கூலில் சிலைகள் தயாரிக்கப்பட்டுள்ளன. இதற்காக, கைவினைக்கலைஞர்கள் சுற்றுப்புற சூழலுக்கும், நீர்நிலைகளையும் மாசுபடுத்தாத வகையில், இயற்கையான பொருட்களை பயன்படுத்தியுள்ளனர். அதிகபட்சம் 14 அடி உயரத்துக்கு சிலைகள் தயாரிக்கப்பட்டுள்ளது. சித்தி, புத்தி, கல்வி, மங்கள, தாமரை, மான்,முயல், நந்தி, சிங்கம் உள்ளிட்ட 60 வகைகளில் வித்தியாசமான டிசைன்களிலும் வண்ணங்களிலும், விநாயகர் சிலைகள் தயாரிக்கப்பட்டுள்ளன. மூன்றரை அடி உயரத்துக்கு மேல் 350 விநாயகர் சிலையும், ஒன்றரை அடியிலிருந்து மூன்றரை அடி வரை 2,600 சிலைகளும் தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. விநாயகர் சிலை தயாரிக்கும் பகுதியில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது

போத்தனூரில் முடிந்தது "யார்டு' பணி... எட்டாக்கனியாகும் எட்டு ரயில்கள் : கோவையை புறக்கணிப்பது தொடர்கிறது!

போத்தனூர் "யார்டு' சீரமைப்புப் பணி முடிவடைந்தபின்னும், 8 ரயில்கள் கோவைக்கு வராமல் கேரளா செல்கின்றன.கோவை வழியாக கேரளாவுக்கு இயக்கப்படும் ரயில்களில், 13 ரயில்கள் கோவை ரயில்வே ஸ்டேஷனுக்கு வராமல், போத்தனூர் வழியாக இயக்கப்பட்டு வந்தன. வடகோவை-இருகூர் இடையில் இருவழிப்பாதை இல்லாததைக் காரணம் காட்டி, கோவைக்கு வந்தால் "சிக்னல்' கிடைக்காமல் மிகவும் தாமதமாகும் என்பதன் காரணமாகவே அந்த ரயில்கள் அனைத்தும், இருகூர்-போத்தனூர் வழியாக கேரளாவுக்குச் சென்றன. 

வடகோவை-இருகூர் இடையிலான இருவழிப்பாதை அமைக்கும் பணி, கடந்த 2010 ஆகஸ்ட்டிலேயே முடிவடைந்து விட்டது.அதன்பின்னும், இந்த ரயில்கள் அனைத்தும் கோவைக்குள் திருப்பப்படாமல், போத்தனூர் வழியாகவே இயக்கப்பட்டன. இதனைக் கண்டித்து, கோவை ரயில்வே போராட்டக்குழு உருவாக்கப்பட்டது; இந்த குழுவினர் எடுத்த பல்வேறு முயற்சிகளின் காரணமாக, இதுவரையிலும் 4 ரயில்கள் மட்டும் கோவைக்குத் திருப்பி விடப்பட்டுள்ளன. ஐந்தாவது ரயிலாக, மங்களூரு- புதுச்சேரி வாராந்திர ரயில் (வண்டி எண்:16857/58), வரும் 7ம் தேதியிலிருந்து கோவை ரயில்வே ஸ்டேஷன் வழியாக இயக்கப்படுவதாக அட்டவணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.கடந்த ஏப்ரலில், கோவைக்கு வந்த தென்னக ரயில்வே பொதுமேலாளர் ராகேஷ் மிஸ்ரா, "போத்தனூரில் "யார்டு' பணிகள் முடிந்த பின்பே, மீதமுள்ள ரயில்களை கோவைக்கு திருப்புவது பற்றி முடிவு எடுக்க முடியும்,' என்றார். அதன்படி, கடந்த மாதம் 25ம் தேதியன்றே இந்த பணிகள் முடிவடைந்தன. ஆனால், இன்னும் 8 ரயில்களை கோவைக்குத் திருப்புவது பற்றி, ரயில்வே நிர்வாகம் எந்த முடிவும் எடுக்காமல் உள்ளது. தற்போது, திருப்பி விடப்பட்டுள்ள 5 ரயில்களில் சென்னை-ஆழப்புழா ரயில் மட்டுமே, தினசரி ரயிலாகும். திருவனந்தபுரம்-பிலாஸ்பூர், மும்பை-திருவனந்தபுரம், மங்களூரு-புதுச்சேரி (வழி:சேலம்), மங்களூரு-புதுச்சேரி (வழி:திருச்சி) ஆகிய 4 ரயில்களும், வாராந்திர ரயில்களாகும். இவற்றில், யஷ்வந்த்பூர் -கண்ணனூர் இடையே இயக்கப்படும் தினசரி ரயில் கோவைக்குத் திருப்பப்பட்டால், பெங்களூருவுக்கு "ஆம்னி' பஸ்களில் அநியாயக்கட்டணம் கொடுத்து, ஆபத்தான பயணத்தை மேற்கொள்ளும் பல ஆயிரும் பேரும் தப்பிப்பார்கள்.சென்னைக்கும் தினமும் கூடுதலாக 3 ரயில்கள் கிடைக்கும் என்பதால், சென்னைக்கு இயக்கப்படும் ஆம்னி பஸ்களின் எண்ணிக்கையும் பாதியாகக் குறையும்; ஆனால், போத்தனூர் "யார்டு' பணி முடிவடைந்த பின்னும், இந்த ரயில்களைத் திருப்புவது பற்றி, ரயில்வே நிர்வாகம் எந்த முடிவும் எடுக்காமல் இருப்பது, கோவை மக்களிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது. இதனால், "ஆம்னி' பஸ் உரிமையாளர்களுக்கும், ரயில்வே அதிகாரிகளுக்கும் இடையிலான "ரகசிய ஒப்பந்தம்' காரணமா என்ற கேள்வி, கோவை மக்களிடம் எழுந்துள்ளது; ரயில்வே அதிகாரிகளின் அடுத்த கட்ட நடவடிக்கையே இதற்கு விடை கொடுக்கும்.
"டாட்டா' காட்டும் எட்டு இவைதான்!
1.யஷ்வந்த்பூர்-கண்ணனூர் எக்ஸ்பிரஸ் (தினசரி)
2.சென்னை-மங்களூரு எக்ஸ்பிரஸ் (தினசரி)
3.ஹூப்ளி-கொச்சுவேலி எக்ஸ்பிரஸ் (வாரம் ஒரு முறை)
4.சென்னை-திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் (வாரம் ஒரு முறை)
5.பெங்களூரு-எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் (வாரமிருமுறை)
6.பெங்களூரு-எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் (வாரம் ஒரு முறை)
7.சென்னை-திருவனந்தபுரம் மெயில் (தினசரி)
8.சென்னை-மங்களூரு மெயில் (தினசரி) 
இவற்றில், சென்னை-திருவனந்தபுரம் மெயில் (வண்டி எண்: 12623/24) போத்தனூரிலும் நிற்பதில்லை; ஈரோட்டுக்கு அடுத்ததாக பாலக்காட்டில் மட்டுமே நிறுத்தப்படுகிறது. இடையிலுள்ள கோவை, திருப்பூர் என்ற இரு பெரும் நகரங்களுக்கும் இந்த ரயில் "டாட்டா' காட்டிச் செல்கிறது

தாமரைக்குளத்தில் மண் அள்ள எதிர்ப்பு :மாவட்ட நிர்வாகத்துக்கு எச்சரிக்கை

அவிநாசியில் உள்ள தாமரைக்குளத்தில், தினமும் 200க்கும் மேற்பட்ட லோடு மண் அள்ளப்படுகிறது. இதற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.திருப்பூர் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயமான அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில் தல வரலாற்றில் தொடர்புடையது தாமரைக்குளம். 150 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இக்குளத்தில், சில நாட்களாக, தினமும் 200 லோடு மண் அள்ளப்படுகிறது. நான்கு மற்றும் ஆறு வழிச்சாலை பணிக்காக, ஐ.வி. ஆர்.சி.எல்., நிறுவன லாரிகள் மூலம், மண் அள்ளப்படுகிறது.கடந்தாண்டு, தாமரைக்குளத்தில் 

ஆயிரக்கணக்கான லோடு மண் அள்ளியபோது, பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். அதனால், சேவூர் அருகே கிளாகுளத்துக்கு சென்று, மண் அள்ளப்பட்டது. தற்போது மீண் டும் தாமரைக்குளத்தில் மண் அள்ளப்படுகிறது. இதற்கு, விவசாயிகள், பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கலெக்டர் அளித்த விதிமுறைகளை மீறி, மண் அள்ளிச் செல்வதாக, விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.அவிநாசி ஒன்றிய அகில இந்திய விவசாயிகள் சங்க செயலாளர் வெங்கடாசலம் கூறியதாவது:தாமரைக்குளத்தில் தினமும் நூற்றுக்
கணக்கான லோடு மண் அள்ளுவதால், குளத்தில் பல இடங்கள் மிக ஆழமாகி விட்டது. களிமண், செம்மண், வண்டல் மண் என பல வகையான மண் உள்ளது. வண்டல் மண்ணையும் தாண்டி, கிணறு தோண்டும்போது கிடைக்கும் மண் வருகிறது. அதையும் விட்டு வைக்காமல் அள்ளிச் செல்லப்படுகிறது.குளத்தை ஆழப்படுத்தினால், தண்ணீர் தேங்கி நிலத்தடி நீர்மட்டம் உயரும் என அதிகாரிகள் மழுப்புகின்றனர். உண்மை அதுவல்ல; வண்டல் மண் இருந்தால், நீர் பரவுவதற்கு, அவை, மண்ணை ஊடுருவி பல இடங்களுக்குச் செல்ல எளிதாக இருக்கும். பாறை அடுக்கு வந்து, அதில் தண்ணீர் தேங்குவதால் எவ்வித பயனும் கிடையாது. மண் வளம் இருந்தால் மட்டுமே நிலத்தடி நீர் மேம்படும். இதுகுறித்து அரசியல் கட்சிகள், பொது அமைப்புகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்களை அழைத்து கூட்டம் நடத்தி, அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து முடிவெடுக்கப்படும், என்றார்.பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் (நொய்யல்) குமாரசாமியிடம் கேட்ட போது, ""ஆறுவழிச்சாலை பணிக்காக, அவிநாசி தாமரைக்குளத்தில் மண் அள்ள, ஐ.வி.ஆர்.சி.எல்., நிறுவனத்துக்கு கலெக்டர் அனுமதி அளித்துள் ளார். மூன்று மீ., ஆழத்துக்கு மட்டுமே மண் எடுக்க வேண்டும். பாறையடுக்கு வரை எடுக்கக் கூடாது. மரங்களை சேதப்படுத்தக்கூடாது என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. நாங்களும் கண்காணித்து வருகிறோம். குளத்தை ஆழப்படுத்துவதால், தண்ணீர் தேங்கி, நிலத்தடி நீர் மட்டம் உயர வாய்ப்புள்ளது,'' என்றார்.விவசாயிகள் கூறியதாவது:தாமரைக்குளத்தில் தண்ணீர் நிரம்பினால், வெளியேறுவதற்கு வழி கிடையாது. கரை உடைந்து, ஊருக்குள் வெள்ளம் புகுந்து விடும். இது, அதிகாரிகளுக்கு தெரிந்திருந்தும், மண் அள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது. குளத்துக்கு மிக அருகில் அவிநாசி
லிங்கேஸ்வரர் கோவில் உள்ளது. மழை பெய்து, குளம் நிரம்பினால், கோவில் பாதிக்கப்படும்.குளத்தில் பரவலாக நான்கைந்து மீ., ஆழத்துக்கு, ராட்சத பொக்லைன் இயந்திரங்களை கொண்டு இரவு, பகலாக மண் அள்ளப்படுகிறது. தாமரைக்குளத்தில் மண் அள்ளுவதற்கு உடனே தடை விதிக்க, கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும். மண் அள்ளுவது தொடர்ந்தால், லாரிகளை சிறைபிடித்து போராட்டம் நடத்துவோம், என்றனர்

இரண்டாம் பருவ இலவச பாட புத்தகங்கள் தயார் :3.72 லட்சம் மாணவர்களுக்கு வழங்க ஏற்பாடு

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மூன்று லட்சத்து 72 ஆயிரம் மாணவ, மாணவிகளுக்கான இரண்டாம் பருவப் பாட புத்தகங்கள் விரைவில் வழங்கப்பட உள்ளன.கல்வியில் உள்ள ஏற்றத் தாழ்வுகளை நீக்கும் பொருட்டு தமிழக அரசு கடந்த 2010ம் ஆண்டு முதல் மற்றும் ஆறாம் வகுப்பிற்கு சமச்சீர் பாட திட்டத்தை அறிமுகப்படுத்தியது. 
2011ம் ஆண்டு முதல் ஒன்றாம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை சமச்சீர் பாட திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.அதனைத் தொடர்ந்து மாணவர்களின் புத்தகச் சுமையைக் குறைக்கும் பொருட்டு கடந்த 2012-13 கல்வி ஆண்டு முதல் பருவ (செமஸ்டர்) முறையை அறிமுகப்படுத்தியதோடு, ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் பாட புத்தகம் இலவசமாக வழங்கப்பட்டது.முப்பருவ முறை இந்த கல்வி ஆண்டு முதல் 9ம் வகுப்பு வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஒன்று முதல் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான முதல் பருவ புத்தகங்கள் ஜூன் மாதம் 10ம் தேதி பள்ளி திறந்ததும் இலவசமாக வழங்கப்பட்டன. இவர்களுக்கு வரும் 12ம் தேதி முதல் 21ம் தேதி வரை முதல் பருவத் தேர்வு நடைபெறவுள்ளது. தேர்வு முடிந்து 22ம் தேதி முதல் அக்டோபர் 2ம் தேதி வரை விடுமுறை விடப்படுகிறது.முதல் பருவத் தேர்வு முடிந்து அக்டோபர் 3ம் தேதி பள்ளிகள் திறந்ததும், மாணவர்களுக்கு இரண்டாம் பருவத்திற்கான பாட புத்தகங்கள் வழங்கும் பொருட்டு தமிழ்நாடு பாடநூல் நிறுவனம், ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தேவையான பாட புத்தகங்களை அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதனை தற்போது ஒவ்வொரு பள்ளிகளுக்கும் பிரித்து அனுப்பப்பட்டு வருகிறது.அதன்படி கடலூர் மாவட்டத்தில் அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மூன்று லட்சத்து 72 ஆயிரத்து 549 மாணவ, மாணவிகளுக்குத் தேவையான இரண்டாம் பருவ பாட புத்தகங்கள், வழங்கப்பட உள்ளது.இதற்காக மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலகத்திற்கு இரண்டு லட்சத்து 60 ஆயிரத்து 100 "செட்' புத்தகங்களும் (ஒன்றாம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை), மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்திற்கு ஒரு லட்சத்து 12 ஆயிரத்து 449 "செட்' புத்தகங்கள் (6ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை) வந்துள்ளது.தமிழ்நாடு பாடநூல் கழகங்களில் இருந்து வந்துள்ள இரண்டாம் பருவ புத்தகங்களை, பள்ளிகளுக்கு பிரித்து அனுப்பும் பணி நேற்று முதல் நடைபெற்று வருகிறது. 
இந்த பணிகளை வரும் 12ம் தேதிக்குள் முடித்து, தேர்வு முடிந்து விடுமுறைக்கு பிறகு பள்ளி திறந்ததும் அனைத்து மாணவர்களுக்கும் வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது

இயற்கை அங்கக உரமிடுவதால் மகசூல் அதிகரிப்பு : சவாலில் சாதனை படைத்த விவசாயிகள்

இயற்கை உரம் கிடைக்காமல் திண்டாடும் விவசாயிகளுக்கு வரப்பிரசாதமாக இயற்கையான அங்கக உரம் கிடைத்துள்ளது. கடலில் வளர்க்கப்படும் செயற்கை பாசியில் இருந்து இந்த உரம் தயாரிக்கப் படுகிறது.நாட்டில் மக்கள் பலர் அரிசியையே முக்கிய உணவாக கொண்டு வாழ்கின்றனர். நவீன தொழில் நுட்பங்கள் வளர்ந்துள்ள கால கட்டத்தில் உணவு உற்பத்தியை பெருக்குவது விவசாயிகளுக்கு சவாலாக அமைந்துள்ளது. ரசாயன உரங்களை தொடர்ந்து பயன்படுத்துவதால் நிலத்தின் வளம் சீர்கேடு அடைந்துள்ளது. இதனை சரிசெய்ய இயற்கை உரங்களான தொழு உரம், பசுந்தாள் உரங்கள் மற்றும் இதர வேளாண் கழிவுப் பொருட்கள் கிடைக்காத நிலை உள்ளது.
புதிய அங்கக உரம் 
இயற்கை உரங்கள் காணாமல் போனதால், விவசாயிகளுக்கு இயற்கை யாக கிடைக்கும் வகையில் ஒருஅங்கக உரம் கண்டறியப்பட்டுள்ளது. கடலில் வளரும் செயற்கை பாசியில் இருந்து முழுமையான அங்கக உரம் தயாரிக்கப்படுகிறது.இந்த உரத்தை மத்திய அறிவியல் தொழில் ஆராய்ச்சி மையத்தின் கட்டுப்பாட்டில் உள்ள மத்திய உப்பு மற்றும் கடல்சார்ந்த ரசாயன ஆராய்ச்சி மையம், கண்டறிந்து உலக காப்புரிமை பெற்றுள்ளது.இந்த கண்டுபிடிப்பை பல்வேறு பயிர்களில், பல்வேறு மண் வகைகளில் 20 மாநிலங்களில் உள்ள வேளாண் ஆராய்ச்சி நிலை யங்களில் பரிசோதித்தனர். இதன் மூலம் அனைத்து விதமான பயிர்களிலும் அதிக மகசூல் கிடைப்பதுடன், தரம் உயர்ந்த விளைபொருள் உற்பத்தியாவதும் நிரூபிக்கப் பட்டது.
"ஜெல்" வடிவில் உரம் 
இந்த கடற்பாசி உரத்தொழில் நுட்பத்தை ஸ்கைவின் பயோ டெக் என்ற நிறுவனம் காப்புரிமை பெற்று, உரத்தின் வீரி யத்தை அதிகப்படுத்தும் வகையில் நெல்பயிருக்கு உகந்த அங்கக இடுபொருளை உற்பத்தி செய்கிறது.இதற்காக அங்கக மற்றும் பயோ பொருட்களை ஆராய்ச்சியின் அடிப்படையில் உள்ளடக்கிய "டீய்ப் ஜெல்' என்ற புதிய ஜெல் வடிவிலான இடுபொருளை வடிவமைத்துள்ளது.கூடுதல் நன்மைகள் இந்த அங்கக உரத்தில், சுற்றுப் புறச் சூழலை மாசுபடுத்தாத அனைத்து ஊட்டங்களும் இடம் பெற்றுள்ளது. பயிர்களின் வேர்கள் ஆழமாகவும், அடர்ந்தும் வளர்வதால் ஊட்டச் சத்துக்கள் மற்றும் தண்ணீர் அதிகளவில் உள்கிரகிக்கப்படுகிறது.உபயோகிக்கும் முறைஒரு ஏக்கருக்கு டீய்ப் ஜெல் 5 கிலோ மற்றும் மக்கிய தொழு உரத்தை 20 கிலோ மணலுடன் நன்கு கலந்து வயல்களில் சீராக தண்ணீர் (2.5 செ.மீ.,) வைத்து, நடவு செய்த 10 நாட்களுக்குள் இட வேண்டும். இத்துடன் 10 கிலோ சன்மேக் நுண்ணூட்டத்தையும் கலந்து இட வேண்டும்.சாதனை விவசாயி:விக்கிரவாண்டி அருகே பயிர் சாகுபடிக்கு சவாலாக விளங்கிய தனது நிலத்தில் நெல் பயிரிட்டு, அமோக விளைச்சலை ஏற்படுத்தியுள்ளார். விக்கிரவாண்டி அடுத்த தொரவி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ராதாகிருஷ்ணன், தனது நிலத்தில், புதிய முயற்சியாக இயற்கை அங்கக உரத்தைப் பயன்படுத்தி ஏ.எஸ்.-36 ரக நெல் பயிரிட்டார். நடவு செய்த 10 நாட்களில் ஒரு ஏக்கருக்கு 8 கிலோ பயோ சக்தி குருணை மற்றும் 10 கிலோ மைக்ரோ கோல்டு நுண்ணூட்ட உரத்தை கலந்து நெல் வயலில் பயன்படுத்தினார்.அடுத்த சில நாட்களில் நெற்பயிர் கரும்பச்சை நிறத் துடன், அதிக தூர்களுடன் செழித்து வளர்ந்தது. பரீட்சார்த்த முறையில் ஒரு ஏக்கரில் நெல் சாகுபடி செய்த அவர், இதனைக் கண்டு ஆச்சரியமடைந்தார். மேலும் தனது 9 ஏக்கரிலும் நெல் பயிரை தெம் புடன் சாகுபடி செய்துள்ளார்.மணக்கும் மல்லிகை பனையபுரம் அடுத்த விஸ்வரெட்டிப்பாளையம் கிராமத்தில் ஆம்ஸ்ட்ராங், முருகன், வெங்கடேசன், கிருஷ்ணமூர்த்தி, பாலு, நாராயணன் உள்ளிட்ட விவசாயிகள் நீண்ட காலமாக இயற்கை அங்கக உரங்களை பயன்படுத்தி பூக்கள் பயிரிட்டுள்ளனர். இதில் கூடுதல் மகசூல் மற்றும் அதிக லாபம் கிடைக்கிறது என தெரிவித்துள்ளனர்

பள்ளிகளில் துப்புரவு பணியாளர் நியமன குளறுபடி: அமைச்சர், எம்.எல்.ஏ.,க்கள் சிபாரிசு நீதிபதி காட்டம்

உசிலம்பட்டி கல்வி மாவட்ட பள்ளிகளில் வாட்ச்மேன், துப்புரவு பணியாளர்கள் நியமனம் அமைச்சர், எம்.எல்.ஏ.,க்கள் சிபாரிசுப்படி நடந்ததாக தாக்கலான வழக்கில், கல்வி அதிகாரிகளிடம் விளக்கம் பெற்று தெரிவிக்க, மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது. 
திருப்பரங்குன்றம் கணேசன் தாக்கல் செய்த மனு: மதுரை மாவட்டத்தில் உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் வாட்ச்மேன், துப்புரவு பணியாளர் நியமனத்திற்கு, தகுதியானவர்களை வேலை வாய்ப்பு அலுவலகம் 2012 ஜூன் 6 ல் பரிந்துரைத்தது. நேர்காணல் தேர்வில் பங்கேற்க, மேலூர் கல்வி அலுவலர், நேர்காணல் கடிதம் அனுப்பினார். வாட்ச்மேன் பணிக்காக 2012 ஜூன் 14 ல் நேர்காணலில் பங்கேற்றேன். நான் 8 வது வகுப்பு படித்து, 1993ல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தேன். நான் வாய்பேச முடியாத மாற்றுத்திறனாளி. வேலைவாய்ப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சதவீத ஒதுக்கீடு வழங்க வேண்டும். எனக்கு கூடுதல் தகுதி 
இருந்தும், பணி நியமனம் வழங்கவில்லை.
உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் 57 பேரை வாட்ச்மேன், துப்புரவு பணியாளர்களாக நியமித்தனர். மதுரை, மேலூர், உசிலம்பட்டி கல்வி மாவட்டங்களில் மேற்கண்ட பணி நியமனங்கள் குறித்த பட்டியலை, கல்வி மாவட்ட அலுவலர்களிடம் தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் கோரினேன். 
உசிலம்பட்டி கல்வி மாவட்டத்திற்கு மட்டும் பட்டியல் வழங்கினர். அதில் நியாயமற்ற முறையில், அரசியல்வாதிகளின் சிபாரிசுப்படி பணியாளர்களை தேர்வு செய்துள்ளனர். மற்ற இரு கல்வி மாவட்ட அதிகாரிகள் பதில் தரவில்லை. 
உசிலம்பட்டி கல்வி மாவட்டத்தில் சமூக நீதியை தோற்கடித்துள்ளனர். தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் பெற்ற தகவல்களை இத்துடன் இணைத்துள்ளேன். உசிலம்பட்டி கல்வி மாவட்டத்தில் வாட்ச்மேன், துப்புரவு பணியாளர்கள் நியமனம் சட்டவிரோதம் என அறிவித்து ரத்து செய்ய வேண்டும். புதிய நியமனம் மேற்கொள்ள உத்தரவிட வேண்டும், என குறிப்பிட்டார்.
நீதிபதி எஸ்.நாகமுத்து முன், விசாரணைக்கு மனு வந்தது. முன்னாள் பள்ளிக்கல்வி இயக்குனர் தேவராஜன் (தற்போது அரசு தேர்வுத்துறை இயக்குனர்), பணியாளர் தொகுதி முன்னாள் இணை இயக்குனர் கண்ணன் 
(தற்போது இடைநிலைக்கல்வி ஆராய்ச்சிக் கல்வி இயக்குனர்), கல்வி மாவட்ட அலுவலர்கள் ஜெயமீனாதேவி 
(மதுரை), சீமான் (மேலூர்), ரவிக்குமார் (உசிலம்பட்டி), உசிலம்பட்டி கல்வி மாவட்ட அலுவலக "டெஸ்க்' கண்காணிப்பாளர் மாயன் ஆஜராயினர். மனுதாரர் தரப்பில் 
வக்கீல் எஸ்.பாலமுருகன் 
ஆஜரானார்.
உசிலம்பட்டி கல்வி மாவட்டத்தில், பணி நியமன ஆவணங்களை நீதிபதி ஆய்வு செய்தார். அதில்,"எம்.எல்.ஏ., மாவட்டச் செயலாளர் பரிந்துரைப்படி பணி நியமனம் மேற்கொள்ள வேண்டும்,' என, ஒரு குறிப்பு இருந்தது. இதை போன் தகவல் அடிப்படையில் எழுதியது யார்? என நீதிபதி கேள்வி எழுப்பினார்.
மாயன்: பள்ளிக் கல்வி இயக்குனர் அலுவலகத்திலிருந்து 2012 ஜூலை 26 ல் வந்த போன் தகவல் அடிப்படையில் எழுதினேன்.
நீதிபதி: உண்மையைக் கூறுங்கள்; சட்டப்படி எல்லாம் நடக்கும். கற்பனையாக நீங்களே எழுதி விடுவீர்களா? இது சாதாரண துப்புரவு பணியாளர்கள் நியமனம் தொடர்பானது. இதைப் பார்க்கையில், நாட்டில் சட்டத்தின் ஆட்சி உள்ளதா? என கேட்கத் தோன்றுகிறது. போனில் பேசியது ஆண் குரலா? பெண் குரலா? 
மாயன்: தெரியவில்லை.
நீதிபதி: பணி நியமனம் தொடர்பாக மதுரை, மேலூர் கல்வி மாவட்ட அலுவலர்கள் ஆவணங்கள் தாக்கல் செய்துள்ளனர். சிலவற்றை மறைத்துள்ளனர். தில்லுமுல்லு நடந்துள்ளது. இதை சாதாரணமாக எடுக்க முடியாது. மாநில போலீஸ் விசாரித்தால் சரியாகாது. சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட வேண்டி வரும். மனுதாரருக்கு தகவல் உரிமைச் சட்டம் நன்றாக பயன்பட்டுள்ளது. கல்வி அதிகாரிகளின் பதில், பதிவு செய்யப்படுகிறது. அரசு வக்கீல், கல்வி அதிகாரிகளிடம் விளக்கம் பெற்று தெரிவிக்க வேண்டும். விசாரணை செப்., 6க்கு தள்ளிவைக்கப்படுகிறது, என்றார். 
தகவல் உரிமை சட்டத்தால் 
வெளியான உண்மை: துப்புரவு பணியாளர் நியமனத்திற்கு 38 பேர் தேர்வான விபரத்தை, தகவல் சட்டத்தின் கீழ் உசிலம்பட்டி கல்வி மாவட்ட அலுவலர் வழங்கிய பட்டியலை மனுதாரர் வக்கீல் தாக்கல் செய்தார். அதில் தகுதி அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டவர்கள், கூட்டுறவுத்துறை அமைச்சர், மதுரை வடக்குத் தொகுதி, மதுரை தெற்கு, உசிலம்பட்டி, திருமங்கலம் எம்.எல்.ஏ.,க்கள், மதுரை மாவட்டச் செயலாளர் சிபாரிசுப்படி தேர்வு செய்யப்பட்டவர்கள் (16 பேர்) என தனித்தனியாக பிரித்து பட்டியலிடப்பட்டுள்ளது.

ஜாதித் தலைவர்களின் குரு பூஜை ரூ.2.5 கோடி சொத்து சேதம் 29 பேர் கொலை

தென் மாவட்டங்களில், ஜாதித் தலைவர்களின் குருபூஜையின் போது அரசு மற்றும் தனியார் சொத்துக்களுக்கு ரூ.2 கோடியே 5லட்சம் மதிப்பில் சேதம் விளைவிக்கப்பட்டது. பல சம்பவங்களில் 29 பேர் கொல்லப்பட்டுள்ளனர்,' என, மதுரை ஐகோர்ட் கிளையில் டி.ஜி.பி., பதில் மனு செய்தார். தீர்ப்பை நீதிபதி தள்ளிவைத்தார். 
ராமநாதபுரம் மாவட்ட தமிழ்ப் புலிகள் செயலாளர் சிவகுமார் தாக்கல் செய்த மனு: சங்கரன்கோவில் நெற்கட்டும்செவலில், ஒண்டிவீரன் நினைவுநாள் நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டும். ஜாதித் தலைவர்கள் சம்பந்தமான நிகழ்ச்சிகளுக்கு, வாடகை வாகனங்கள் 
தரக்கூடாது; மீறினால் பறிமுதல் செய்யப்படும் என ராமநாதபுரம் எஸ்.பி., உத்தரவிட்டுள்ளார். எஸ்.பி., உத்தரவை ரத்து செய்ய வேண்டும். போலீஸ் பாதுகாப்புடன் பங்கேற்க அனுமதிக்க, வேண்டும், என குறிப்பிட்டார்.
நீதிபதி என்.கிருபாகரன், ""மூன்று ஆண்டுகளில் ஜாதித் தலைவர்களின் குரு பூஜையின் போது பொதுச்சொத்துக்களுக்கு ஏற்பட்ட சேதம், கொலை மற்றும் பதிவான வழக்குகளை டி.ஜி.பி., தாக்கல் செய்ய வேண்டும்,'' என 
உத்தரவிட்டார்.
நேற்று இம்மனு மீண்டும் விசாரணைக்கு 
வந்தது. டி.ஜி.பி., தாக்கல் செய்த பதில் மனு: மதுரை உட்பட தென் மாவட்டங்களில் 2010 ல் 18 பேர் காயமடைந்தனர். 2011 ல் 8 பேர் (விபத்து), 7 பேர், மொத்தம் 15 பேர் கொல்லப்பட்டனர்; 222 பேர் காயமுற்றனர். 2012 ல் 14 பேர் கொல்லப்பட்டு, 96 பேர் காயமுற்றனர். மூன்று ஆண்டுகளில் 29 பேர் கொல்லப்பட்டுள்ளனர்; 336 பேர் காயமுற்றனர்.
வழக்குகள்: 2010 ல் கொலை முயற்சி 2, கலவரம் 1, கல்வீச்சு 12 மற்றும் இதர வழக்குகள் 17, மொத்தம் 32 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. சொத்துக்களுக்கு 23 ஆயிரத்து 200 ரூபாய் மதிப்பில் சேதம் விளைவித்தனர்.
2011 ல் கொலை முயற்சி 15, கலவரம் 4, காயம் விளைவித்தல் 5, கல்வீச்சு 85, இதரம் 40, மொத்தம் 149 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. சொத்துக்களின் சேத மதிப்பு ஒரு கோடியே 79 லட்சத்து 35 ஆயிரத்து 670 ரூபாய்.
2012 ல் கொலை 6, கொலை முயற்சி 10, கலவரம் 24, காயம் விளைவித்தல் 5, கல்வீச்சு 113, இதரம் 28, மொத்தம் 187 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. சொத்துக்களின் சேத மதிப்பு 25 லட்சத்து 42 ஆயிரத்து 701 ரூபாய். 
மொத்தம் 3 ஆண்டுகளில் 368 வழக்குகள் பதிவு செய்துள்ளனர்; சொத்துக்களின் சேத மதிப்பு 2 கோடியே 5 லட்சத்து ஆயிரத்து 571 ரூபாய். 
இவை மதுரை, ராமநாதபுரம், விருதுநகரில் அதிகம், என குறிப்பிட்டார். தீர்ப்பை நீதிபதி தள்ளிவைத்தார்

அரசு மருத்துவமனையில் பிறந்தது ஆணா... பெண்ணா... பணத்துக்காக பாலினத்தை மாற்றும் கொடுமை

மதுரை அரசு மருத்துவமனை மகப்பேறு வார்டில், குழந்தையின் பாலினத்தை தவறாக சொல்லி, பணம் பறிக்கும் கும்பலால் நேற்று, மீண்டும் பிரச்னை ஏற்பட்டது. இதுகுறித்து, பெண்ணின் உறவினர்கள், போலீஸ் ஸ்டேஷனில் புகார் செய்தனர்.
மதுரை அண்ணாநகரைச் சேர்ந்த பழனிக்குமாரின் மனைவி தேவிகா,23. இவருக்கு அரசு மருத்துவமனையில் நேற்று மதியம் 3 மணிக்கு குழந்தை பிறந்தது. வார்டுக்குள் தாய் இருந்தபோது, வெளியே இருந்த உறவினர்களிடம் அங்குள்ள பணியாளர்களில் சிலர், "ஆண் குழந்தை பிறந்திருக்கிறது' என்றுக்கூறி, ரூ.500 லஞ்சம் வாங்கினர். பின் ஒருமணி நேரம் கழித்து, "ஆண் குழந்தை என்று தவறுதலாக கூறிவிட்டோம்' எனக்கூறி பெண் குழந்தையை கொடுத்தனர்.
இதனால், ஆத்திரமடைந்த உறவினர்கள், ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, போலீசில் புகார் செய்தனர். பழனிக்குமார் கூறுகையில்,""பணியாளர்கள் தான், முதலில் ஆண்குழந்தை பிறந்தது என்று சொன்னார்கள். அரைமணி நேரம் கழித்து, தவறாக சொல்லிவிட்டோம் என்கின்றனர். எதை உண்மையென நாங்கள் நம்புவது?,'' என்றார். இதுதொடர்பாக, நேற்றிரவு வரை வழக்குப்பதிவு செய்யவில்லை. நிர்வாக ரீதியான விசாரணைக்கு டீன் மோகன் உத்தரவிட்டுள்ளார். 
இது புதிதல்ல: ஒரு மாதத்திற்கு முன், பிரசவ வார்டில் நள்ளிரவில் ஒரு பெண்ணுக்கு பிறந்த, பெண் குழந்தையை, உறவினர்களிடம், "ஆண் குழந்தை பிறந்திருக்கிறது' என்று கூறி 500 ரூபாய் வாங்கியுள்ளனர். 
வார்டுக்கு மாற்றும் போது, "பெண் குழந்தை பிறந்தது' என தெரிவிக்கவே, "பிறந்தது ஆண் குழந்தை தான்' என்று, உறவினர்கள் பிரச்னை செய்தனர். குழந்தை பெற்ற பெண்ணிடம், டாக்டர்கள் நேரடியாக விசாரித்தபின்பே, பிரச்னை முடிவுக்கு வந்தது. இதுகுறித்து ஆக., 11ல் செய்தி வெளியிடப்பட்டது. 
இரண்டு மாதத்திற்கு முன், மதுரை வாடிப்பட்டி பொம்மப்பட்டியைச் சேர்ந்த தினகரன் மனைவி மீனாட்சியின், 22 ஆண் குழந்தையை, மகப்பேறு வார்டுக்குள்ளேயே, ஒரு பெண் கடத்திச் சென்றார். இன்று வரை அக்குழந்தை கிடைக்கவில்லை. 
மதுரை அரசு மருத்துவமனையில் ஒரு நாளைக்கு 40 முதல் 50 குழந்தைகள் பிறக்கின்றன. இதில் எத்தனை குழந்தைகள் இப்படி தினந்தோறும் பாலினத்தை மாற்றி கூறப்படுகிறது என்பது தெரியவில்லை. டாக்டர்கள் தான் குழந்தையின் பாலினத்தை சொல்ல வேண்டும். அல்லது பிரசவிக்கும் நேரத்தில் உறவினர் கட்டாயம் இருக்க வேண்டும். இதுகுறித்து சுகாதாரத் துறை பரிசீலிக்க வேண்டும்

தென்பெண்ணை–பாலாறு இணைப்பு திட்டத்தில் செட்டேரி அணையை சேர்க்க விவசாயிகள் கோரிக்கை

தமிழக விவசாயிகள் சங்க மாநாடு வேலூர் மாவட்டம் வெலக்கல் நத்தத்தில் மாணிக்கம் தலைமையில் நடந்தது. மாநில தலைவர் சின்னசாமி, கண்ணைய நாயுடு, கிருஷ்ணமூர்த்தி, நீதிவர்ணகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:–
பாலாறு பகுதி மக்களுக்கு பயனுள்ள திட்டமான தென்பெண்ணை – பாலாறு இணைப்புக் கால்வாய்த் திட்டத்தை செயல்படுத்த சட்டமன்றத்தில் அறிவித்து மக்கள் வாழ்வை மேம்படுத்தும் முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் முயற்சிக்கு நன்றியை காணிக்கையாக்குகிறோம்.
பாலாறு –தென்பெண்ணை இணைப்பு திட்டத்தை மேலும் விரிவுபடுத்தி ஏற்கனவே கிருஷ்ணகிரி அணையிலிருந்து பெரியேரி வரை கிருஷ்ணகிரி அணை தண்ணீர் கொண்டுவரப்பட்டுள்ளது.
அங்கிருந்து சுமார் 15 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள செட்டேரி அணைக்கு எண்ராம்பள்ளி ஏரி, நேரலக்கோட்டை வழியாக, ஒப்புதவாடி ஏரியை இணைத்தும் அடுத்து செட்டேரி டேமிற்கு தண்ணீரை கொண்டு வரவாய்ப்புள்ளது.
இத்திட்டத்தை செயல்படுத்தினால் கத்தெரி கால்வாய் வழியாக பாலாற்றில் தண்ணீர் கலப்பதற்கு வாய்புள்ள நிலையில், வேலூர் மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்தையும், விவசாயத்தையும், தாகத்தையும் தீர்க்கலாம். இதனால் தென்பெண்ணை–பாலாறு இணைப்பு திட்டத்தில் செட்டேரி அணையை சேர்க்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது

வேலூர் பில்டர்பெட் ரோட்டில் டாஸ்மாக் கடையை மாற்றக்கோரி பொதுமக்கள் முற்றுகை: பாருக்கு சீல் வைப்பு

வேலூர் மாநகராட்சி 34–வது வார்டு பில்டர்பெட் ரோட்டில் பாருடன் டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது.
இந்த கடையில் மது குடிப்பவர்கள் பெண்களை கேலி செய்கிறார்கள். அருவறுப்பாக பேசுகிறார்கள். வழிப்பறி, திருட்டு அதிகரித்து வருகிறது என அப்பகுதி பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.
மேலும் டாஸ்மாக் கடையை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டுமென தொடர்ந்து வலியுறுத்தினர். அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் கடை அகற்றபடவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள், கவுன்சிலர் அயூப்கான் தலைமையில் டாஸ்மாக்கடை முன்பு இன்று திரண்டனர். கடையை மூடக்கோரி முற்றுகையிட்டனர். பின்னர் கடை முன்பு அமர்ந்து கோஷம் எழுப்பினர்.
வேலூர் தெற்கு போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பொது மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதுபற்றி தகவலறிந்த டாஸ்மாக் மேலாளர் மகேஸ்வரி சம்பவ இடத்துக்கு சென்றார். அவரையும் பொதுமக்கள் முற்றுகையிட்டனர். அவர் பொதுமக்களை சமாதானம் செய்தார்.
அப்போது அங்குள்ள பார் அனுமதியின்றி இயங்கியது தெரியவந்தது. உடனே நடவடிக்கை எடுத்து பாருக்கு மேலாளர் மகேஸ்வரி சீல் வைத்தார். இதனையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது

சைக்கோ கொலையாளி ஜெய்சங்கர் தப்பி ஓட்டம்: தமிழக–கர்நாடக எல்லையில் உள்ள கிராமங்களில் போலீசார் விசாரணை

சேலம் மாவட்டம் எடப்பாடியை சேர்ந்த காமக்கொடூரன் ஜெய்சங்கர் (வயது 36) பெங்களூர் சிறையில் இருந்து தப்பி சென்றான். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இவனைப்பற்றி தகவல் தெரிவிப்பவர்களுக்கு ரூ.5 லட்சம் பரிசு தரப்படும் என்று கர்நாடக போலீஸ் மந்திரி ஜார்ஜ் அறிவித்து உள்ளார். அவனை பிடிக்க பெங்களூர் குற்றப் பிரிவு இணை கமிஷனர் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த தனிப்படை போலீசார் தமிழக போலீசாரை தொடர்பு கொண்டு அவனை தேடி வருகிறார்கள். பெங்களூர் அருகே தமிழக– கர்நாடக எல்லையில் உள்ள கிராமங்களில் போலீசார் சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சைக்கோ கொலையாளி ஜெய்சங்கர் என்றும் செல்லமாக சங்கர் என்றும் அழைக்கப்பட்டு வந்த இவனது சொந்த ஊர் சேலம் மாவட்டம் எடப்பாடி அருகில் உள்ள கோனசமுத்திரம் வழி கன்னியாம்பட்டி காட்டு வளவு ஆகும்.
இவனுக்கு பரமேஸ்வரி (வயது 32) என்ற மனைவியும், ஜமுனாதேவி, தேன்மொழி, ஹேமாவதி என்ற மகள்களும் உள்ளனர். குமார் என்கிற செல்வக்குமார் என்ற அண்ணனும், வெங்கடேஸ்வரி என்ற அக்காளும் உள்ளனர். பிளஸ்–2 வரை படித்துள்ள ஜெய்சங்கர், முதலில் மினி பஸ் டிரைவராக பணியாற்றினார். பின்னர் லாரி டிரைவராக மாறினார்.
ஜெய்சங்கர் கொங்கணா புரத்தில் மினி பஸ் டிரைவராக பணியாற்றிய போது, அவருக்கும், கொங்கணாபுரத்தை சேர்ந்த மகளிர் மன்ற தலைவியும், சுய உதவி குழு தலைவியுமான இந்திராகாந்தி (வயது 32) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இவர் திருமணம் ஆனவர். இவருடன் ஜாலியாக ஊர் சுற்றி வந்த ஜெய்சங்கருக்கும், இந்திராகாந்திக்கும் தகராறு ஏற்பட்டது. ஜெய்சங்கரை திருமணம் செய்து கொள்ள இந்திராகாந்தி வற்புறுத்தி வந்தார். இதனால் கோபம் அடைந்த ஜெய்சங்கர், இந்திராகாந்தியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி அவரை சங்ககிரி போலீஸ் நிலையம் அருகில் உள்ள பகுதிக்கு அழைத்து சென்று கற்பழித்து தாக்கி கொன்றார்.
பின்னர் இந்திராகாந்தி அணிந்து இருந்த தாலி, தோடு, செல்போனை திருடி கொண்டு தப்பி சென்று விட்டார். இது தான் ஜெய்சங்கர் செய்த முதல் கொலை ஆகும். இந்திரா காந்தி கொடுத்த தொந்தரவு ஜெய்சங்கருக்கு பெண்களை பிடிக்காமல் போனது. இதனால் பெண்களை கண்டால் அவர்களை கொலை செய்ய வேண்டும் என்ற வெறி ஏற்பட்டது. சேலம், ஈரோடு, கோவை, தர்மபுரி, கிருஷ்ணகிரி மற்றும் கர்நாடக, ஆந்திர மாநிலங்களில் பல பெண்களை கற்பழித்து கொன்றான்.
இவன் தனியே வரும் பெண்கள் அல்லது வீடுகளில் தனியே இருக்கும் பெண்களை தாக்கி கொன்று பணம், நகைகளை திருடும் குணம் கொண்டவன். பெண்களை பிடித்து கொண்டதும் அவர்களின் கழுத்தை கத்தியால் அறுப்பான். இதனால் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடுவார்கள். இந்த நேரத்தில் அவன் அவர்களை கற்பழித்து நகைகளை திருடி கொண்டு தப்பிவிடுவான். இவன் ஒரு மனநோயாளி. இவன் வெளியில் இருந்தால் பெண்களுக்கு ஆபத்து. எந்த நேரத்திலும் பெண்களை அவன்தாக்கி கொல்வான். இவனை பார்த்தாலோ, அல்லது இருக்கும் இடம் தெரிந்தாலோ உடனே அருகில் உள்ள போலீஸ் நிலையத்தில் தெரிவியுங்கள் என்றும் கர்நாடக – தமிழக போலீசார் கேட்டு கொண்டுள்ளனர்.
காமக்கொடூரன் ஜெய்சங்கர் பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தான். முதலில் தமிழக சிறைகளில் அடைக்கப்பட்டு இருந்தான். அப்போது அவனுக்கு தமிழக சிறைகளில் கடும் பாதுகாப்பு போடப்பட்டு இரவு – பகலாக கண்காணிக்கப்பட்டான். ஆனால் பெங்களூர் சிறையில் அவன் சிறை அதிகாரிகள், சிறை ஊழியர்களிடமும், மற்ற கைதிகளிடமும் சகஜகமாக பழகி வந்தான். இதனால் அவன் மீது யாருக்கும் சந்தேகம் வரவில்லை. இருப்பினும் இவனைப்பற்றி தமிழக போலீசார் பெங்களூர் சிறை அதிகாரிகளிடம் ஜெய்சங்கரிடம் உஷாராக இருங்கள் என எச்சரித்து வந்தனர்.
இதையடுத்து ஜெய் சங்கர் தனிச்சிறையில் அடைக்கப்பட்டான். தீவிரவாதிகள், நக்சலைட்டுகள் போன்றவர்களை அடைக்கும் தனிச் சிறையில் அவன் அடைக்கப்பட்டு இருந்தான். இதனால் அவனுக்கு கோபம் அதிகரித்தது. தன்னை தனிமைச்சிறையில் அடைத்த கர்நாடக சிறைத்துறை அதிகாரிகளை பழி வாங்க வேண்டும் என்ற எண்ணத்தில் நாடகம் ஒன்றை அரங்கேற்றினான். உடல் நிலை சரியில்லாதது போல் நாடகம் ஆடி அடிக்கடி ஆஸ்பத்திரிக்கு பாதுகாப்புடன் சென்று சிகிச்சை பெற்று வந்தான். அப்போது அவனை சந்திக்க வரும் உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் சிறையில் இருந்து தப்பிக்கும் யோசனையை கூறி இருக்கிறான். அதற்கு அவர்கள் அவன் கேட்ட சிறு உதவிகளை செய்து கொடுத்துள்ளனர். இதன்மூலம் அவன் பெங்களூர் சிறையில் இருந்து தப்பி சென்று இருக்கலாம் என்று போலீசார் கருதுகிறார்கள்.
மேலும் அவன் கடந்த சில நாட்களாக பெங்களூர் சிறையில் உள்ள ஆஸ்பத்திரியில் படுத்து சிகிச்சை எடுத்து வந்தான். இங்கு சிகிச்சை பெற்று கொண்டே இவன் தப்பி செல்ல திட்டம் வகுத்துள்ளான். மின்சாரம் தடைபடும் நேரத்தில் தப்பி செல்ல திட்டமிட்டு இதற்கான நேரத்தை எதிர்பார்த்து இருந்துள்ளான். சம்பவத்தன்று இரவு பெங்களூர் பகுதியில் பலத்த மழை பெய்தது. இந்த நேரத்தில் மின்தடை ஏற்பட்டது. இதை பயன்படுத்தி கொண்ட ஜெய்சங்கர், சிறை ஆஸ்பத்திரியில் இருந்து வெளியில் வந்து 3சுவர்களை தாண்டி தப்பி உள்ளான். இவன் சுவர்களில் ஏறி தப்பியபோது காலில் காயம் ஏற்பட்டுள்ளது. இந்த ரத்தம் சிறையில் வெளிப்பகுதியில் கொட்டி கிடந்தது. இதை பார்த்த ரோந்து போலீசார் சிறை அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளனர். பின்னரே கைதி ஜெய்சங்கர் தப்பி சென்றது தெரியவந்தது.
இவனது ரத்தக்கறையை வைத்து போலீஸ் மோப்ப நாய்கள் வரவைத்து மோப்பம் பிடிக்க விடப்பட்டது. இந்த நாய்கள் பெங்களூர் முழுவதும் சுற்று வந்தது. தேசிய நெடுஞ்சாலையில் ஒரு இடத்தில் போய் படுத்துக் கொண்டது. இதனால் அங்கிருந்து லாரி அல்லது பஸ்சில் அவன் தப்பி இருக்கலாம் என்று போலீசார் கருதுகிறார்கள்.
இதனால் இவன் எங்காவது ஒரு கிராமத்தில் பதுங்கி இருக்கலாம் என்று போலீசார் கருதுகிறார்கள்.
ஜெய்சங்கர் சாப்பாடு இல்லாமல் எத்தனை நாட்களும் பசி பட்டினியுடன் இருப்பான். கோர்ட்டுக்கு அழைத்து வந்த போது சேலத்தில் போலீசாரை ஏமாற்றி ஜெய்சங்கர் தப்பி சென்றான். இவனை கோவையை சேர்ந்த போலீசார் அழைத்து வந்து இருந்தனர். இவனை இவர்களும், சேலம் போலீசார் தேடினர். எங்கும் அவன் இல்லை.
பின்னர் இவன் கர்நாடகாவில் பல மாதங்களுக்கு பிறகு கைது செய்யப்பட்டான். அப்போது இவன் பரபரப்பு வாக்குமூலம் அளித்தான். அதில், சேலத்தில் தான் தப்பி சென்றதும் எங்கும் செல்லாமல் பஸ்நிலையம் அருகில் உள்ள ஒரு பாலத்திற்கு அடியில் ஒரு இரவு, ஒரு பகல் என்று அங்கேயே பதுங்கி இருந்தேன். பிறகு வெளியில் வந்து மேச்சேரிக்கு சென்று அங்கிருந்து லாரி மூலம் பெங்களூர் சென்று பதுங்கி கொண்டேன் என்று தெரிவித்து இருந்தான்.
இவன் தப்பி சென்றதால் கோவை போலீஸ் ஏட்டு தன்னை உயர் அதிகாரிகள் சஸ்பெண்டு செய்து விடுவார்கள் என எண்ணி தற்கொலை செய்து கொண்டார். பல பெண்களை கொலை செய்த ஜெய்சங்கர் போலீஸ் ஏட்டு தற்கொலைக்கும் காரணம் ஆனவன் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜெய்சங்கர் பல நாட்கள் சாப்பிடாமல் பதுங்கி இருப்பான் என்பதால் இவன் பெங்களூரில் இருந்து ஓசூர் வரை உள்ள அனைத்து பாலங்களிலும், அருகில் உள்ள கிராமங்களில் உள்ள வீடுளிலும் போலீசார் சோதனை செய்து வருகிறார்கள். சிறிய சிறிய கிரா மங்களுக்கும் போலீசார் சென்று ஜெய்சங்கர் பற்றி விளக்கமாக கூறி அவனை பற்றி தகவல் கொடுங்கள் என்று மைக்கில் கூறி வருகிறார்கள்

சென்னிமலை முருகன் கோவில் உண்டியல் பணம் கொள்ளை

ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் மலைமீது புகழ்மிக்க முருகன் கோவில் உள்ளது. ஈரோடு மாவட்டம் அல்லாமல் தமிழ்நாடு முழுவதும் சென்னிமலை முருகன் கோவிலுக்கு தினமும் பக்தர்கள் வந்து செல்வார்கள்.
தற்போது கோவிலில் ராஜகோபுரம் கட்டப்பட்டு பிரம்மாண்ட மதில் சுவரும் கட்டப்பட்டு அதில் சிற்ப வேலைபாடுகள் நடந்து வருகிறது. பலகோடி ரூபாய் மதிப்பில் திருப்பணிகள் நடந்து வருகிறது.
இந்த கோவிலில் மொத்தம் 9 உண்டியல்கள் உள்ளன. இதில் நிரந்தர உண்டியல்கள் 7–ம், அன்னதான உண்டியல் 1–ம், திருப்பணி உண்டியல் 1–ம் உள்ளன.
கோவிலில் கங்காதரன், சத்தியமூர்த்தி என்ற 2 காவலாளிகள் உள்ளனர். மேலும் ஆட்கள் அங்குதங்கி கோவில் திருப்பணி வேலையிலும் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் நேற்று நள்ளிரவில் மர்ம ஆசாமிகள் கோவிலுக்குள் புகுந்து உள்ளனர். அர்ச்சனை டிக்கெட் கொடுக்கும் இடம் அருகே உள்ள திருப்பணி உண்டியலை அப்படியே பெயர்த்து தூக்கி கொண்டு சென்றனர்.
மலைப்பாதையின் 7–வது சுற்று வளைவில் அந்த உண்டியலை உடைத்த கொள்ளையர்கள் அதிலிருந்த ஆயிரக்கணக்கான பணத்தை வாரி சுருட்டிக் கொண்டு உடைக்கப்பட்ட உண்டியலை அங்கேயே போட்டு விட்டு சென்று விட்டனர்.
கடந்த மாதம் 21–ந் தேதி சென்னிமலை முருகன் கோவில் உண்டியல்களின் பணம் திறந்து எண்ணப்பட்டது. மொத்தம் உள்ள 9 உண்டியல்களில் 8 உண்டியல்கள் எண்ணி முடிக்கப்பட்டது. மாலை 6 மணி ஆனதால் ஒரேயொரு உண்டியலான திருப்பணி உண்டியல் மட்டும் எண்ண வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக இந்த திருப்பணி உண்டியல் கடந்த ஆண்டு 9–வது மாதத்தில் எண்ணப்பட்டது. இதனால் கொள்ளையடிக்கப்பட்ட உண்டியலில் எப்படியும் ரூ.1 லட்சம் குறையாமல் இருக்கும் என்று கருதப்படுகிறது.
இந்த துணிகரகொள்ளை சம்பவம் பற்றி கோவில் செயல் அலுவலர் பசவ ராஜன் சென்னிமலை போலீசுக்கு தகவல் கொடுத்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவகுமார் விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகிறார்.
கோவிலில் உள்ள 2 காவலாளிகளில் நேற்று சத்தியமூர்த்தி என்ற காவலாளிக்கு விடுமுறை. மற்றொரு காவலாளியான கங்காதரன் மட்டும் நேற்று இரவு பணியில் இருந்தார்.
அவர் கூறும்போது, ‘‘நேற்று இரவு கோவிலில் ரவுண்டு வந்தேன். 12 மணிக்கு திருப்பணி உண்டியல் அதே இடத்தில் தான் இருந்தது’’ என்று கூறி னார்.
நள்ளிரவு 12 மணிக்கு பிறகுதான் கொள்ளையர்கள் இந்த கைவரிசையில் ஈடுபட்டுள்ளனர். இந்த கொள்ளை சம்பவம் சென்னிமலை மற்றும் ஈரோடு மாவட்டம் முழுவதும் உள்ள பக்தர்கள் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

சமயநல்லூர் அருகே ரூ.6 லட்சம் மதிப்புள்ள கோவில் நகைகள் மோசடி

மதுரை மாவட்டம் சமயநல்லூர் போலீஸ் சரகம் தேனூர் சுந்தரவள்ளியம்மன் திருக்கோயில் தக்கார் ராஜேந்திரகுமார், சமயநல்லூர் காவல் நிலையத்தில் கொடுத்துள்ள புகாரில் கூறியிருப்பதாவது:–
மதுரை மாவட்டம் தேனூர் சுந்தரவள்ளியம்மன் திருக்கோயில் மதுரை உதவி ஆணையரின் உத்தரவுபடி தக்கார் நியமனம் செய்யப்பட்டு 4.10.97முதல் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது.
இந்த கோவிலுக்கு சொந்தமான 221 கிராம் தங்கம், 137 கிராம் வெள்ளி நகைகளை முன்னாள் நிர்வாகி முத்துநாயகம் மகன் சோனைமுத்து வசம் இருந்தது. அதை ஒப்படைக்கும்படி பலமுறை தபால் மூலமாகவும், நேரடியாகவும் கேட்டும் அதை கொடுக்காமல், தருகிறேன் தருகிறேன் என்று சொல்லி ஏமாற்றி வந்தார்.
மேலும் கோவிலுக்கு சொந்தமான நகைகளை மோசடி செய்து மறைத்து வைத்தும் அதை விற்று விட்டதாக தெரிகிறது. தங்க நகை மதிப்பு ரூ.6 லட்சம், வெள்ளி நகை மதிப்பு ரூ.40 ஆயிரம்.
எனவே இது சம்மந்தமாக விசாரணை செய்து அரசுக்கு சுமார் ரூ.6,40,000 இழப்பை ஏற்படுத்தியவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த புகாரின் மீது சமயநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன், சப்–இஸ்பெக்டர் ராஜா ஆகியோர் வழக்கு பதிவு செய்து முன்னாள் பஞ்சாயத்து தலைவர் சோனைமுத்துவை வலைவீசி தேடி வருகின்றனர்

மதுரை ரிங் ரோட்டில் கள்ள நோட்டு கும்பல் மோதல்

மதுரை ரிங் ரோட்டில் நள்ளிரவில் காரில் 6 பேர் கொண்ட கும்பல் வந்தது. அவர்களை சந்திப்பதற்காக மதுரை சிலைமான் கல்மேடு பகுதியை சேர்ந்த மாரிமுத்து (வயது52) என்பவர் மோட்டார் சைக்கிளில் வந்தார். அப்போது அந்த கும்பல் காரைவிட்டு இறங்கி மாரிமுத்துவிடம் பேசிக் கொண்டிருந்தனர். சிறிது நேரத்தில் அவர்களிடையே தகராறு ஏற்பட்டது.
இதையடுத்து மாரி முத்துவை கத்தியால் குத்திய கும்பல் காரில் தப்பியது. இது குறித்து சிலைமான் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் கத்திக் குத்து காயத்துடன் கிடந்த மாரிமுத்துவை சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்த னர்.
மாரிமுத்துவிடம் விசாரணை நடத்தியதில் அந்த கும்பல் சென்னை நோக்கி காரில் தப்பியது தெரியவந்தது. இதையடுத்து சோதனைச் சாவடிகளில் வாகன சோதனை நடத்தப்பட்டது.
கொட்டாம்பட்டி அருகே அந்த கும்பல் சென்ற ஸ்கார்பியோ காரை போலீசார் மடக்கினர். அவர்களை விசாரணைக்காக சிலைமான் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்தனர்.
விசாரணையில் சென்னையை சேர்ந்த மாய கிருஷ்ணன், முனீஸ்வரன், காளிமுத்து, மதுரையை சேர்ந்த சோனைமுத்து, சரவணன், கார்த்திக் கணேசன் ஆகிய 6 பேரும் பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் மாரிமுத்துவை கத்தியால் குத்தியதாக தெரியவந்தது.
இதையடுத்து காரை பறிமுதல் செய்த போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து 6 பேரையும் கைது செய்தனர்.
கைதான 6 பேரும் கள்ள நோட்டு கும்பலாக இருக்கலாம் என்ற சந்தேகம் போலீசாருக்கு ஏற்பட்டுள்ளது. அவர்களிடம் இருந்த பணத்தை கைப்பற்றி போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். இந்த சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

கணவர் விவாகரத்து–கள்ளக்காதலனும் கைவிட்டார்: மனம் உடைந்த இளம்பெண் குழந்தையை கொன்று தற்கொலை

அரியலூர் அழகப்பன் நகரைச் சேர்ந்தவர் வடிவேல். இவரது மனைவி உமா (வயது 29). இவர்களது மகள் ஹரிணி (7). இவள் அங்குள்ள பள்ளியில் 2–ம் வகுப்பு படித்து வந்தாள். குடும்ப பிரச்சினை காரணமாக கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பாக உமாவின் கணவர் வடிவேல் விவாகரத்து செய்து விட்டார்.
அதன் பின்பு மகள் ஹரிணியுடன் உமா தனியாக வசித்து வந்தார். குடும்பத்தை வழிநடத்த பெரம்பலூரில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.
அப்போது அதே நிறுவனத்தில் அருண்குமார் என்பவரும் வேலை பார்த்தார். அவருடன் உமாவிற்கு பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் அவர்களிடையே கள்ளக்காதலாக மாறியது. இருவரும் தனிமையில் சந்தித்தனர். பல நேரங்களில் உமாவுடன் அருண்குமார் உல்லாசமாக இருந்து வந்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பாக அருண்குமார் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இது பற்றிய தகவல் அறிந்த உமா மனமுடைந்தார்.
இதைத்தொடர்ந்து மகள் ஹரிணியை வீட்டில் சேலையில் தூக்கு போட்டு கொன்று விட்டு தானும் அதே சேலையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது பற்றிய தகவல் அறிந்ததும் இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி, சப்–இன்ஸ்பெக்டர் சுமதி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உமா மற்றும் ஹரிணியின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள்.
விசாரணையில் அருண் குமாருக்கு அனுப்பிய எஸ்.எம்.எஸ்.சில் என் சாவுக்கு நீ தான் காரணம் என்று குறிப்பிட்டிருந்தார். மேலும் வீட்டில் ரத்தத்தால் எழுதப்பட்ட கடிதம் ஒன்று இருந்தது.
அதில் என்னுடைய வாழ்க்கையை ஏமாற்றி மோசடி செய்து விட்டாய் என்று அருண்குமார் மீது புகார் குறிப்பிட்டு இருந்தார். அதனையும் போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது

தெரு பெயரை கடன் வாங்கும் மக்கள் விசித்­திரம்! 22 ஆண்டு கோரிக்கை நிறை­வே­றுமா?

ஆலந்துார் பகு­தியில், 22 ஆண்­டு­க­ளாக ஒரு தெரு­வுக்கு பெயர் சூட்டப்­ப­ட­வில்லை. அதனால், பக்­கத்து தெருக்­களின் பெயர்­களை கடன் வாங்கி பயன்­ப­டுத்தி வரும் 11 குடும்­பங்கள் பல்­வேறு இன்­னல்­களில் சிக்கி தவிக்­கின்­றனர். இது­கு­றித்து முதல்வர் தனிப்­பி­ரி­வுக்கு அனுப்­பப்­பட்ட மனு­வுக்கு, மாந­க­ராட்சி சரி­யான பதில் அளிக்­க­வில்லை என, பகு­தி­வாசிகள் 
குற்­றம்­சாட்­டு­கின்­றனர்.
மாந­க­ராட்சி, 165வது வார்டு, சரஸ்­வதி தெரு மற்றும் பாலாறு தெரு அருகில், 30 அடி அகலம், 300 அடி நீளம் கொண்ட ஒரு தெரு உள்­ளது. அங்கு, 11 வீடுகள் உள்­ளன. அந்த தெரு­வுக்கு பெயர் இல்லை.
குழப்பம்
அதனால், அந்த தெருவில் உள்ள ஐந்து வீடு­களை சேர்ந்தோர், அவர்­க­ளுக்கு பக்­கத்து தெரு­வான சரஸ்­வதி தெரு பெய­ரையும், மீதி ஆறு வீடு­களை சேர்ந்தோர், அவர்­க­ளுக்கு அடுத்­துள்ள பாலாறு தெரு பெய­ரையும் பயன்­ப­டுத்தி, சொத்து வரி, குடிநீர் வரி, கழி­வுநீர் வரி, மின்­வா­ரிய கட்­டணம் போன்­ற­வற்றை செலுத்தி வரு­கின்­றனர்.
அந்த, 11 வீடு­களின் முகவரிக்கு, கூரியர், கால் டாக்சி மற்றும் ‘டோர்’ டெலி­வரி பொருட்கள் கொண்டு செல்வோர், சரஸ்வதி மற்றும் பாலாறு தெருக்­களில் வீட்டு எண்­களை தேடி­விட்டு ‘தவ­றான முக­வரி’ என, 
திரும்பி சென்று விடு­கின்­றனர்.
மேலும், குடும்ப அட்டை, பாஸ்போர்ட் விண்­ணப்பம் குறித்த உண்மை தகவல் அறிய செல்லும் அதி­கா­ரி­களும், ஒரே தெருவில் உள்ள வீடுகள், இரண்டு தெரு பெயர்­களை பயன்­ப­டுத்­து­வதை பார்த்து குழப்பம் அடை­கின்­றனர். இதனால், பகு­தி­வா­சிகள் பல்­வேறு இன்­னல்­க­ளுக்கு ஆளாகி 
வரு­கின்­றனர்.
இது­போன்ற சிக்­கல்­களை களைய அந்த தெரு­வுக்கு தனி பெயர் சூட்ட வேண்டும் 
என, பகு­தி­வா­சிகள் கோரிக்கை விடுத்­தனர். அதை­ய­டுத்து, ஆலந்துார் நக­ராட்­சி­யாக இருந்­த­போது, 1999ல், ‘பிரம்­ம­புத்­திரா தெரு’ என, பெயர் சூட்ட, மன்ற கூட்­டத்தில் தீர்­மானம் நிறை­வேற்­றப்­பட்டு, அர­சுக்கு அனுப்­பப்­பட்­டது. மீண்டும், 2010ல், நக­ராட்சி சார்பில் அர­சுக்கு நினை­வூட்டல் கடிதம் அனுப்­பப்­பட்­டது.
முதல்­வரின் தனிப்­பி­ரி­வுக்கும் மனு அனுப்­பப்­பட்­டது. தனிப்­பி­ரிவில் இருந்து அந்த மனு, மாந­க­ராட்­சிக்கு அனுப்­பப்­பட்­டது. மனுவில் விவ­ரங்கள் குழப்­ப­மாக இருப்­பதால், மனுவை நிரா­க­ரித்து விட்­ட­தாக மாந­க­ராட்சி பதில் அனுப்­பி­யது.
என்ன ஆனது?
இது­கு­றித்து, 84 வய­தான பகு­தி­வாசி வர­தாச்­சாரி கூறி­ய­தா­வது:
முதல்­வ­ருக்கு அனுப்­பிய மனுவை அதி­கா­ரிகள் தெளி­வாக படித்து பார்க்­காமல் பதில் கடிதம் எழுதி உள்­ளனர். ஆலந்துார் 
நக­ராட்­சியில் நிறை­வேற்­றப்­பட்ட தீர்­மானம் என்ன ஆனது என, தெரி­ய­வில்லை.
இவ்­வாறு அவர் கூறினார்.
மாந­க­ராட்சி அதி­கா­ரி­க­ளிடம் கேட்­ட­போது, ‘முதல்வர் தனிப்­பி­ரிவு மனு­வுக்கு பதில் கடிதம் எழு­தி­யதில் தவறு எங்கு
நடந்­தது என, தெரி­ய­வில்லை. விசா­ரணை செய்து நட­வ­டிக்கை எடுக்­கப்­படும்’ என்­றனர்.

களிமண் சிலைக்கு பதில் கற்­சிலை சென்­னையில் வித்­தி­யா­ச­மான விநா­யகர் சதுர்த்தி

கடந்த 21 ஆண்­டு­க­ளாக பெரம்பூர் ஜெயா தோட்ட குடி­யி­ருப்­பு­வா­சிகள் வித்­தி­யா­ச­மான முறையில் விநா­யகர் சதுர்த்தி விழாவை கொண்­டாடி வரு­கின்­றனர்.
பெரம்பூர் ரயில் நிலையம் அருகே உள்­ளது ஜெயா தோட்டம். அங்கு 30க்கும் மேற்­பட்ட குடி­யி­ருப்­புகள் உள்­ளன.
அங்கு நடக்கும் விநா­யகர் சதுர்த்தி விழா கொண்­டாட்டம் குறித்து, பெரம்பூர் ஜெயா தோட்ட நண்­பர்கள் குழு­வினர் கூறி­ய­தா­வது:
விநா­யகர் சதுர்த்தி விழாவில், விநா­யகர் சிலை பிர­திஷ்டை செய்து பின் அதை கடலில் கரைப்­பதால், மூன்று நாட்கள் கொண்­டா­டப்­பட்ட சிலை கடலில் கரை­வதும், அதனால் கடல் மாச­டை­வதும், எங்­களை பெரிதும் பாதித்­தது.
அதனால் விநா­யகர் சதுர்த்­தியின் போது வைக்­கப்­படும் சிலை, நம்மால் சிதைக்­கப்­ப­டாமல், பிற­ருக்கு உதவும் வகையில் அமைய வேண்டும் என்று எண்­ணினோம்.
அதன் பய­னாக கடந்த 20 ஆண்­டு­
க­ளுக்கு முன், இரண்டு முதல் இரண்­டரை அடி உய­ரத்தில் பல வடி­வங்­களில் ஆன விநா­யகர் கற்­சி­லை­யுடன், பலி­பீடம், மூஞ்­சூறு உள்­ளிட்­ட­வை­களை வாங்­கினோம். சிலையை வீட்டில் வைத்து முறை­யாக பூஜித்து, பின் குடி­யி­ருப்­புக்கு மத்­தியில், விநா­யகர் சதுர்த்தி அன்று 
பிர­திஷ்டை செய்வோம்.
விநா­யகர் சதுர்த்தி முடிந்து, மூன்று நாட்கள் கழித்து, விநா­யகர் சிலையை பலி­பீடம் மற்றும் மூஞ்­சூறு வாக­னத்­துடன் தமி­ழ­கத்தில் உள்ள ஏதா­வது ஒரு கோவி­லுக்கு தான­மாக கொடுத்து விடுவோம். 
இவ்­வாறு கடந்த 21 ஆண்­டு­க­ளாக, நாங்கள் வழி­பட்ட சிலையை கொடுத்து வரு­கிறோம்.
இவ்­வாறு அவர்கள் கூறினர்.
இந்­தாண்டு வைக்­கப்­படும் கற்­பக விநா­யகர் சிலையை, திரு­வண்­ணா­மலை மாவட்­டத்­தி­லுள்ள வேதாந்­தீஸ்­வரர் கோவி­லுக்கு கொடுப்­ப­தாக திட்­ட­மிட்­டு உள்­ளனர்

புதிய அனல் மின்­நி­லையம் அமைக்­கப்­படும் இடத்தில் இரும்பு துகள்­களை அள்ள குவியும் வியா­பா­ரிகள்

எண்ணுாரில், புதிய அனல்மின் நிலையம் அமையவுள்ள இடத்தை சமன்படுத்துவதற்காக, லாரி­களில் ஏற்றி வரப்­படும் மண் குவி­யல்­களி­லி­ருந்து டன் கணக்கில் இரும்பு துகள்­களை அள்­ளு­வ­தற்­காக, வியா­பா­ரிகள் குவி­கின்­றனர்.
எண்ணுார் அனல் மின்­நி­லை­யத்தை ஒட்டி, புதி­தாக அமைக்­கப்­படும் அனல்மின் நிலை­யத்தில் 600 மெகாவாட் மின்­சாரம் உற்­பத்தி செய்­யப்­பட உள்­ளது. அதற்­காக, இடம் தேர்வு செய்­யப்­பட்டு, நிலப்­ப­கு­தியை சமப்­ப­டுத்தும் பணி நடந்து வரு­கி­றது.
அதற்கு வச­தி­யாக, அனல் மின்­நிலை­யத்தை ஒட்டி குவித்து வைக்­கப்­பட்­டி­ருந்த இரும்பு துகள்கள் அடங்­கிய மண் குவியல் லாரிகள் மூலம் அங்கு கொண்டு வரப்­ப­டு­கி­றது.
அனல் மின்­நி­லையம் அமைக்கும் இடம், மிகவும் பள்­ள­மா­கவும், குள­மா­கவும் இருந்­ததால், ஒரு ஆள் உய­ரத்­திற்கு மேல், மண் நிரப்­பப்­ப­டு­கி­றது.
அந்த மணல் குவி­யலில், இரும்பு பொருட்கள், துகள்கள், டன் கணக்கில் கிடப்­ப­தாக தகவல் பரவியதால், அனல் மின்­நி­லை­யத்தின் சுற்­றுப்­ப­கு­தியில் வசிக்கும் பகு­தி­வா­சிகள் மற்றும் இரும்பு வியா­பா­ரிகள், தினமும் முற்­று­கை­இட்டு வரு­கின்­றனர்.
இதனால், எர்­ணாவூர் எர்­ணீஸ்­வரன் நக­ரி­லி­ருந்து, சுவர் உடைக்­கப்­பட்டு, அந்த வழி­யாக, வியா­பா­ரிகள் மட்­டு­மின்றி பகு­தி­வா­சி­களும் இரும்பு துகள்­களை அள்­ளு­வ­தற்கு வரிசை கட்டி வரு­கின்­றனர்.
இது­போன்ற கார­ணங்­களால், எர்­ணாவூர் எர்­ணீஸ்­வரன் நகர் மக்­க­ளுக்கும், இரும்பு துகள்­களை அள்ளும் கும்­ப­லுக்கும் வீண் தகராறு ஏற்­ப­டு­கி­றது. இது­கு­றித்து அதி­கா­ரி­களும், போலீ­சாரும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்­துள்­ளது.

விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்...கேள்விக்குறி! மருத்துவமனையில் காத்திருக்கும் நோயாளிகள்

கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் மயக்க டாக்டர் (அனஸ்தீஷ்யா) பற்றாக்குறையால் முதல்வர் ஜெயலலிதாவின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டம் ஏழை மக்களுக்கு பலனளிக்குமா என்பது கேள்விக்குறியாகியுள்ளது.
தமிழகத்தில் உள்ள ஏழை மக்கள் உயிர்க்கொல்லி நோய்களில் இருந்து விடுபடவும், உடல்நலத்தைப் பேணிக் காக்கவும் கலைஞர் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வந்தது. இத்திட்டத்தில் மருத்துவர்கள் சான்றிதழ் கொடுத்தால் நோயாளிகள் விரும்பும் இடத்தில் ஒரு லட்சம் ரூபாய் செலவில் சிறப்பான சிகிச்சை செய்து கொள்ள இந்த காப்பீடு வழி வகை செய்தது.
விரிவான மருத்துவ
காப்பீட்டுத் திட்டம்
அதையடுத்து ஆட்சிக்கு வந்த அ.தி.மு.க., அரசு முதல்வரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தைக் கொண்டு வருவதாக தேர்தல் அறிக்கையில் அறிவித்தது. அதன்படி குடும்பத்தினர் அனைவருமே சிகிச்சை மேற்கொள்ளும் வகையில் ஆண்டுக்கு ஒரு லட்சம் வீதம் 4 லட்சம் ரூபாய் மதிப்பில் சிகிச்சை செய்து கொள்ளும் விரிவான மருத்துவ திட்டத்தை அமல்படுத்தியது.
மேலும் கொடிய நோய்கள் உட்பட தீப்புண், டயாலிசிஸ், எலும்பு சம்பந்தப்பட்ட நோய் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கும் இந்த திட்டத்தின் மூலம் சிறந்த சிகிச்சையைப் பெற முடியும்.
அதே நேரத்தில் பெரும்பாலான அறுவை சிகிச்சைகள் அரசு மருத்துவமனைகளிலேயே அதற்கான சிகிச்சையை அளிக்க வகை செய்யப்பட்டுள்ளன. ஒரு சில அறுவை சிகிச்சைகளுக்கு மட்டும் தனியார் மருத்துவமனைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளன.
அரசு அலுவலகங்களில்
டிஜிட்டல் விளம்பரம்
தற்போது சுகாதாரம் பற்றி பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக அரசு அலுவலகங்கள், ஆங்காங்கே பெண்கள் கூடும் இடங்களில் டிஜிட்டல் விளம்பர பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. பெண்கள் 30 வயதிற்கு மேல் பரிசோதனை செய்வது அவசியம், சர்க்கரை நோய், கர்ப்பப்பை வாய் புற்றுநோய், மார்பக புற்றுநோய் போன்றவற்றில் இருந்து காப்பாற்றிக் கொள்ள அனைவருமே சோதனை செய்து கொள்ள வேண்டும் என அந்த விளம்பரத்தில் கூறப்பட்டுள்ளது.
இதன் பயனாக பல பகுதிகளில் உள்ள பெண்கள் மருத்துவமனைகள் மூலம் பரிசோதனை செய்து அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். ஆனால் அவர்களுக்கு ஆபத்தான நோய்களுக்கு உடனடியாக அறுவை சிகிச்சை மேற்கொள்ள மருத்துவ காப்பீட்டு ஊழியர்கள் சரியான வழிகாட்டுதல் வழங்குவதில்லை. இதனால் மருத்துமனை நிர்வாகம் நோயாளிகளுக்கு உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்காமல் காலம் தாழ்த்தி வருகிறது.
நோயாளிகள் அலைகழிப்பு
முதல்வரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தை செயல்படுத்துவற்காக கடலூர் அரசு மருத்துவமனை முதல் மாடியில் பெரிய அலுவலக அறை ஒதுக்கப்பட்டுள்ளது. அங்கு ஏராளமான மேஜை, நாற்காலிகள், கம்ப்யூட்டர்கள் இருந்தும் ஒரு பெண் ஊழியர் மட்டுமே பணியில் உள்ளார். இத்திட்டத்திற்காக கொடுக்கப்பட்ட தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டால் நோ ரெஸ்பான்ஸ்.
நேரடியாக அலுவலகத்திற்கு சென்று காப்பீட்டு மூலம் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்றால் கூட, இங்கு 3 மாதமாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளாமல் ஏராளமானோர் காத்துக் கிடக்கின்றனர். நீங்கள் வேறு மருத்துவமனையை பார்த்துக் கொள்ளுங்கள் என "கூலாக' பதில் வரும்.
நோயாளிகளுக்கு "அட்வைஸ்'
கடலூர் அரசு மருத்துவமனையில் கர்ப்பப்பை அகற்றும் அறுவை சிகிச்சைக்காக குள் ளஞ்சாவடியைச் சேர்ந்த கோதண்டபாணி மனைவி சொர்ணம் என்பவர் கடந்த 3 மாதங்களாக மருத்துவமனையிலேயே உள் நோயாளியாக காத்துக் கிடக்கிறார்.
இவரைப்போன்று இன்னும் ஏராளமானோர் சிகிச்சைக்கு வருபவர்களுக்கு, மருத்துவமனை நிர்வாகம் ஏதாவது ஒரு நொண்டி சாக்கைச் சொல்லி தனியார் மருத்துவக் கல்லூரி, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வருகிறது.
இதனால் தலைமை மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் பலர் சிகிச்சை பெறாமல் திரும்புவதோடு, மருத்துவமனைக்கு கிடைக்கும் வருவாயும் கிடைக்காமல் போய் விடுகிறது.
கடலூர் அரசு மருத்துவமனை தேசிய தரச்சான்றுக்காக ஒருபுறம் விழுந்து விழுந்து பாடுபடுவதாக கூறிக் கொண்டாலும் இதுபோன்ற குறைபாடுகள் இருந்தால் இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் தேசிய தரச்சான்று கிடைக்குமா என்பது ஐயமே.
இதுகுறித்து மருத்துவக் காப்பீட்டுத் திட்ட அதிகாரி ஒருவர் கூறுகையில், "மருத்துவமனையில் டாக்டர்கள் பற்றாக்குறையால் சரியாக அறுவை சிகிச்சை மேற்கொள்ள முடியவில்லை. இது பற்றி அரசுக்கும் தெரிவித்துள்ளோம். அதற்கு மாற்றாக தற்போது ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் மக்கள் அறுவை சிகிச்சை செய்து கொள்ள அனுமதி பெறப்பட்டுள்ளது' என்றார்.

பசுமைப்புரட்சி' அமைப்பு போல... ஊருக்கு ஒன்று தேவை...! அசர வைக்கும் அரசூர் இளைஞர்கள்

அரசூரில் இயங்கி வரும் "உலக பசுமைப் புரட்சி' அமைப்பிலுள்ள இளைஞர்கள், மற்ற கிராமங்களில் உள்ள இளைஞர்களுக்கு முன் மாதிரியாக, தங்களது கிராமத்தை பசுமையாக மாற்றும் முயற்சியில் தீவிரமாக உள்ளனர்.
கோவையை அடுத்துள்ள அரசூர், மிகவும் பழமை வாய்ந்த கிராமம். இந்த கிராம ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில், 66 தொழிற்சாலைகள், மத்திய அரசால் அமைக்கப்பட்ட "பவுண்டரி கிளஸ்டர்' ஆகியவை அமைந்துள்ளன. 
மிகவும் வறட்சிக்குரிய இப்பகுதியில் நீர் ஆதாரம், மழைப்பொழிவு எல்லாமே குறைவு என்பதோடு, சரளை மண் நிறைந்த பகுதி என்பதால், மரங்களும், பசுமையும் மிகமிகக்குறைவு. இப்படிப்பட்ட கிராமத்தில், "உலக பசுமைப்புரட்சி' என்ற அமைப்பை துவக்கியுள்ள இந்த கிராமத்தின் இளைஞர்கள், ஊரையே பசுமையாக்கும் முயற்சியில் தீவிரமாகக் களமிறங்கியுள்ளனர்.
இவ்வமைப்பின் தலைவராக ரமேஷ்குமார், செயலராக வைத்தீஸ்வரன், பொருளாளராக ஈஸ்வரன் ஆகியோர் உள்ளனர். 
பள்ளி, கல்லூரி மாணவர்கள், பணிக்குச் செல்வோர், சுயதொழில் செய்வோர் என 14 வயதிலிருந்து 27 வயது வரையிலான இளைய தலைமுறையினர் 60 பேர், இதில் உறுப்பினர்களாகவுள்ளனர். 
"தீதும் நன்றும் பிறர் தர வாரா' என்பதையே தங்கள் அமைப்பின் தாரக மந்திரமாக எடுத்துக் கொண்டுள்ள இந்த இளைஞர்கள், 
"அடுத்த தலைமுறைக்கு நாம் விட்டுச் செல்லும் ஒரே பொக்கிஷம் மரங்களே...நம் நினைவுகளைச் சொல்ல மரங்களை வளர்ப்போம்' என்ற வாசகங்களை முன்னிறுத்தி, பசுமைப் பணியாற்றி வருகின்றனர்.
தங்களது கிராமத்தின் பல்வேறு பகுதிகளிலும் 400 மரக்கன்றுகளை நட்டு, அதைப் பராமரித்து, சிறப்பாக வளர்த்துள்ள இவர்கள், கிராம ஊராட்சி சார்பில் அரசூரில் 11 ஏக்கர் பரப்பில் அமைக்கப்பட்டுள்ள சோலையை வளர்த்தெடுப்பதிலும் முக்கிய பங்காற்றி வருகின்றனர். 
நகரங்களில் மரம் வளர்க்க இடமில்லாததால், கிராமப்புறங்களில் காலியிடங்களைத் தேர்வு செய்து, அதில் பெருமளவில் மரங்களை வளர்த்து, சோலைகளை உருவாக்கும் "பசுமை பஞ்சாயத்து' திட்டத்தின் முதல் களமே, இந்த சோலையாகும்.
"சிறுதுளி' மற்றும் "ராக்' அமைப்புகள் மேற்கொண்டுள்ள இத்திட்டத்தை, அனைத்து கிராம ஊராட்சிகளிலும் செயல்படுத்துவதற்கு பொது சேவை மையம் உறுதுணையாக பணியாற்றி வருகிறது. முதற்கட்டமாக, அரசூரில் அமைக்கப்பட்டுள்ள சோலையில், இந்த அமைப்புகளைச் சேர்ந்தவர்களுடனும், கிராம ஊராட்சி நிர்வாகத்துடனும் இவ்வமைப்பின் இளைஞர்களும் இணைந்து, தண்ணீர் ஊற்றுவது, களை எடுப்பது, செடிகள் சாயாமல் பாதுகாக்க குச்சிகளை சேர்த்துக் கட்டுவது உள்ளிட்ட பல்வேறு பணிகளையும் செய்து வருகின்றனர்.
இதே கிராம ஊராட்சியில், இந்து அறநிலையத்துறைக்குச் சொந்தமான 36 ஏக்கர் இடம், பொட்டல் காடாக உள்ளது. அந்த இடத்தில் மரங்களை வளர்ப்பதற்கான முயற்சிகளை கிராம ஊராட்சித் தலைவர் கோவிந்தராஜ் எடுத்து வருகிறார். அங்கும் இதே போன்ற பிரமாண்டமான சோலையை உருவாக்குவதற்கு முழு ஈடுபாட்டுடன் பணியாற்றுவதற்குத் தயாராக இருப்பதாக இவ்வமைப்பின் இளைஞர்கள் உறுதி கூறுகின்றனர். 

துளிர் விடும் நம்பிக்கை
"உலக பசுமைப்புரட்சி' அமைப்பைச் சேர்ந்த கோபால்சாமி 
கூறுகையில், ""எங்களது அமைப்பின் ஒரே நோக்கம், மரம் வளர்ப்பது மட்டுமே. எங்கள் கிராமத்தை மற்ற ஊர்களுக்கு முன் மாதிரியான பசுமை கிராமமாக மாற்ற வேண்டும் என்பதற்காகவே, எந்தவித எதிர்பார்ப்புகளுமின்றி பணியாற்றி வருகிறோம். அடுத்ததாக, 36 ஏக்கர் பரப்பில் சோலை உருவாக்கும் திட்டத்திலும் எங்களது முழுப்பங்களிப்பு இருக்கும்,'' என்றார். 
சினிமா, கிரிக்கெட், போதை உள்ளிட்ட பல்வேறு மாயைகளில் இளைஞர்கள் பலர், தங்களது நேரத்தையும், வாழ்க்கையையும் தொலைத்து வரும் நிலையில், "உலகளாவிய சிந்தனை, உள்ளூர் அளவிலான செயல்பாடு' என்ற நோக்கோடு பணியாற்றி வரும் இந்த இளைஞர்களைப் பார்க்கும்போது, எத்தனை இடையூறுகள் வந்தாலும், எல்லாவற்றையும் தாண்டி நம் தேசம் எழுந்து நிற்குமென்ற நம்பிக்கை, வலுப்பெறுகிறது

ரயில்வே கேட்'டில் 100 பயணிகள் "கிரேட் எஸ்கேப்' கோவையில் பஸ் - பாசஞ்சர் ரயில் மோதல் தவிர்ப்பு!

கோவை - பொள்ளாச்சி ரோட்டில், "சிட்கோ' பகுதியில் உள்ள "ரயில்வே கேட்'டிற்குப் பதிலாக, புதிய ரயில்வே மேம்பாலம் கட்டும் பணி நடந்து வருகிறது. 
கடந்த 2012 நவம்பரில் துவங்கிய இந்த பணி, வேகமாக நடந்து வருகிறது; மொத்தம் 13 கோடி ரூபாய் மதிப்பில் நடந்து வரும் இந்த பணிக்கு, 18 மாத அவகாசம் வழங்கப்பட்டுள்ளது; அடுத்த ஆண்டு மே மாதத்தில் முடிய வேண்டிய இந்த பணி, வரும் டிசம்பருக்குள் முடியுமென எதிர்பார்க்கப்படுகிறது. 
பாலம் கட்டி முடிக்கப்படும் வரையிலும், இந்த ரோட்டைப் பயன் படுத்த தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள் ளது. அதாவது, கோவையிலிருந்து பொள்ளாச்சி செல்லும் பஸ்கள், போத்தனூர் செட்டிபாளையத்தை சுற்றி ஈச்சனாரி வழியாக பொள்ளாச்சி ரோட்டில் செல்ல வேண்டுமென்றும், பொள்ளாச்சியிலிருந்து கோவைக்கு வரும் பஸ்கள், ஈச்சனாரியிலிருந்து திரும்பி மதுக்கரை மார்க்கெட் ரோடு வழியாக சுந்தராபுரத்தில் மீண்டும் கோவை ரோட்டில் செல்லலாம் என்றும் மாவட்ட நிர்வாகம் அறிவித்தது. 
இதை சில நாட்களுக்கு மட்டும், போலீசார் நடைமுறைப்படுத்தினர். இவ்வாறு சுற்றிச் செல்வதால், தூரமும், பயண நேரமும் அதிகமாவதாக மக்கள் தரப்பில் அதிருப்தி கிளம்பியது. இதையடுத்து, தற்போதுள்ள "ரயில்வே கேட்' ரோட்டை, கோவையிலிருந்து செல்லும் பஸ்கள் ஒரு வழிப்பாதையாகப் பயன் படுத்திக் கொள்ள அனுமதிக்க வேண்டுமென்று, அரசுப் போக்குவரத்துக் கழகம், தனியார் பஸ் உரிமையாளர் சங்க நிர்வாகிகள் இணைந்து, கலெக்டருக்கு கோரிக்கை வைத்தனர். 
ரயில்வே அதிகாரிகள், நெடுஞ்சாலைத்துறை, போக்குவரத்துதுறை அதிகாரிகள் ஆகியோரிடம் கலந்தாலோசித்த பின், இதற்கான அனுமதியை வாய்மொழி உத்தரவாக மாவட்ட நிர்வாகம் வழங்கியதாகக் கூறப்படுகிறது.
இதனால், கோவையிலிருந்து செல்லும் வாகனங்கள் அனைத்துமே, "ரயில்வே கேட்' அமைந்துள்ள ரோட்டில்தான் செல்கின்றன. பாலம் வேலை நடந்து வரும் சூழலில், வாகனங்கள் சென்று வருவதால், பாலம் கட்டும் பணி பாதிக்கப்படுவதோடு, அடிக்கடி "ரயில்வே கேட்'டையும் மூடித்திறக்க வேண்டியுள்ளது. 
மக்கள் பாதிப்பைக் கருத்தில் கொண்டு, இந்த ரோட்டைப் பயன் படுத்த அனுமதி வழங்கியதை உணராமல், அரசு மற்றும் தனியார் பஸ் டிரைவர்கள் இந்த ரோட்டில் தினமும் "ரேஸ்' நடத்தி வருகின்றனர். 
அதிலும், இந்த "ரயில்வே கேட்'டை கடப்பதில் யார் முதல் என்பதில் கடுமையான போட்டி நடக்கிறது. நேற்று மாலை 5.30 மணியளவில், பொள்ளாச்சியிலிருந்து கோவைக்கு வந்து கொண்டிருந்த அரசு மற்றும் தனியார் பஸ்களுக்கு இடையே "யார் முந்துவது' என்ற போட்டியில், அரசு பஸ்ஸை நிதிஷ் என்ற தனியார் பஸ் (வண்டி எண்: டிஎன் 37 பிஒய் 7943) முந்திச் சென்றது. 
ரயில் வருவதற்கு மிகக்குறைவான நேரமிருக்கும் நிலையில், "ரயில்வே கேட்'டை மூடுவதற்கு அங்குள்ள பணியாளர் முயன்றபோது, தனியார் பஸ் வேகமாக தண்டவாளத்தைக் கடக்க முயன்றது. 
முழுமையாக "ரயில்வே கேட்'டை இறக்குவதற்குள் பஸ் வந்து விட்டதால், "கேட்'டை மூட முடியவில்லை. அதேநேரத்தில், பாலக்காட்டிலிருந்து பாசஞ்சர் ரயில், தண்டவாளத்தில் வேகமாக வந்து கொண்டிருந்தது. பஸ் கடப்பதைப் பார்த்த ரயில் இன்ஜின் டிரைவர், சற்று வேகத்தைக் குறைத்துள்ளார். 
அதற்குள், பஸ் தண்டவாளத்தைக் கடந்து விட்டது. வந்த வேகத்திலேயே ரயில் தொடர்ந்து வந்திருந்தால், பஸ்சின் மீது மோதி இருக்கும். ரயில் இன்ஜின் டிரைவரின் சாமர்த்தியத்தால், பஸ்சில் இருந்த 100 பயணிகள் உயிர் தப்பினர்.
நல்லவேளையாக, அந்த பஸ்சைத் தொடர்ந்த வாகனங்கள் எதையும் தொடர விடாமல், "கேட்கீப்பர்' எதிர் திசையில் வந்த வாகனங்களை பின்னோக்கி போகச் செய்து, இரும்பு சங்கிலியால் தடை ஏற்படுத்தியுள்ளார். 
மறுபுறம், உதவியாளர் ஒருவரும் சத்தம் போட்டு, பொதுமக்கள் தண்டவாளத்தை
கடக்காதவாறு, பார்த்துக் கொண்டார். இவர்களின் சமயோசிதம் காரணமாக, நேற்று மிகப்பெரிய விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது. 
இந்த பாசஞ்சர் ரயில் கடந்த சில நிமிடங்களிலேயே, 
டேங்கர் ரயில் சென்றது. ஒரு வேளை, ரயில் இன்ஜின் டிரைவர், ரயில் வேகத்தைக் குறைக்காமல் இருந்திருந்தாலோ, "கேட் கீப்பர்' வேகமாகச் செயல்பட்டு, இரும்புச் சங்கிலியால் தடை ஏற்படுத்தாமல் இருந்திந்தாலோ, நேற்று நடந்த விபரீதத்தை கற்பனை செய்திருக்கவே முடியாது. 
இனியாவது, இந்த வழித்
தடத்தில் உரிய நேரத்திற்கு முன்பே, "ரயில்வே கேட்'டை மூடவும், அத்துமீறி தனியார் பஸ்கள் செல்வதைத் 
தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசர 
அவசியம்.